Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ.1,800 இலக்கு

ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ.1,800 இலக்கு

ஐசிஐசிஐ வங்கி பங்கை ரூ.1,398 மற்றும் ரூ.1,300 நிலைகளில் வாங்கப் பரிந்துரைத்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

தீபாவளி முகூர்த்த வர்த்தகத்தை முன்னிட்டு, சம்வத் 2083-க்கு ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட ஐந்து பங்குகளை கோடக் நியோ பரிந்துரைத்துள்ளது.

பங்கு விலை நகர்வுகளின் அடிப்படையில் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. நீண்ட சரிவுக்குப் பிறகு சில பங்குகள் முக்கிய ஆதரவு விலைகளை நெருங்கியுள்ளதாகவும், மீட்சிக்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் கோடக் நியோ தெரிவித்துள்ளது.


ஐசிஐசிஐ வங்கி பங்கை ரூ.1,398 மற்றும் ரூ.1,300 நிலைகளில் வாங்கப் பரிந்துரைத்துள்ளது. இலக்கு ரூ.1,800. இழப்புத் தடுப்பு விலை ரூ.1,200. ரூ.1,300 அருகே ஆதரவு கிடைத்த பிறகு இப்பங்கு மீண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.


பஜாஜ் பைனான்ஸ் பங்குக்கு ரூ.939, ரூ.850 ஆகியவை வாங்கும் நிலைகள். இலக்கு ரூ.1,200. இழப்புத் தடுப்பு ரூ.770. உச்சத்திலிருந்து 20 சதவீதத்துக்கும் மேல் சரிந்த இப்பங்கு, 200 நாள் சராசரி விலைக்கு அருகே வர்த்தகமாகிறது.
ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் பங்கை ரூ.1,246 மற்றும் ரூ.1,200 நிலைகளில் வாங்கலாம் எனத் தெரிவித்துள்ளது. இலக்கு ரூ.1,475. இழப்புத் தடுப்பு ரூ.1,150.


பாரத் எலெக்ட்ரானிக்ஸ் பங்குக்கு ரூ.370, ரூ.350 ஆகியவை வாங்கும் நிலைகள். இலக்கு ரூ.410. இழப்புத் தடுப்பு ரூ.340.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குக்கு ரூ.1,165, ரூ.1,100 ஆகியவை வாங்கும் நிலைகள். இலக்கு ரூ.1,400. இழப்புத் தடுப்பு ரூ.1,050.


பஜாஜ் பைனான்ஸ், பாரத் எலெக்ட்ரானிக்ஸ் பங்குகளில் முதல் விலையில் திட்டமிட்ட முதலீட்டில் பாதியைச் செலுத்தி, இரண்டாவது விலை நிலையை எட்டும்போது மீதியை முதலீடு செய்ய கோடக் நியோ பரிந்துரைத்துள்ளது.

முந்தைய செய்தி
தீபாவளி முகூர்த்தப் பங்குகள் - ஸ்டெர்லைட் டெக் 103% உயர்வு வாய்ப்பு
அடுத்த செய்தி
பழைய துணிகள் தேக்கம்; நிதி நெருக்கடியில் விசைத்தறி கூட்டுறவு சங்கங்கள்

தொடர்புடைய செய்திகள்