Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

தீபாவளி முகூர்த்தப் பங்குகள் - ஸ்டெர்லைட் டெக் 103% உயர்வு வாய்ப்பு

தீபாவளி முகூர்த்தப் பங்குகள் - ஸ்டெர்லைட் டெக் 103% உயர்வு வாய்ப்பு

ஜிஎல்பி-1 மருந்துகளில் கவனம் செலுத்தும் எரிஸ் லைஃப் சயின்சஸுக்கு ரூ.1,709 இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

தீபாவளி முகூர்த்த வர்த்தகத்துக்காக ஐசிஐசிஐ புருடென்ஷியல் லைஃப், ஸ்டெர்லைட் டெக்னாலஜீஸ் உள்ளிட்ட பங்குகளை வாங்க நிர்மல் பாங் பரிந்துரைத்துள்ளது.

டேட்டா சென்டர்களுக்கான கேபிள் தேவை அதிகரிப்பதால், 2027 முதல் 2029 வரையிலான நிதியாண்டுகளில் ஸ்டெர்லைட் டெக்னாலஜீஸ் வருவாய் ஆண்டுக்கு சராசரியாக 27 சதவீதம் வளரும் என நிர்மல் பாங் கணித்துள்ளது. இப்பங்கின் இலக்கு விலையை ரூ.1,340-லிருந்து ரூ.1,544 ஆக உயர்த்தியுள்ளது. இது சந்தை விலையிலிருந்து இது 103 சதவீத உயர்வு வாய்ப்பைக் குறிக்கிறது.


பாதுகாப்பு மற்றும் ஓய்வூதியக் காப்பீட்டுத் திட்டங்களின் விற்பனை வளர்ச்சியால், ஐசிஐசிஐ புருடென்ஷியல் லைஃப் நிறுவனத்தின் புதிய வணிக மதிப்பு இரண்டாம் காலாண்டில் 20.3 சதவீதம் உயர்ந்து ரூ.710 கோடியானது. இப்பங்குக்கு ரூ.660 இலக்கு விலையையும், 61 சதவீத உயர்வு வாய்ப்பையும் நிர்மல் பாங் கணித்துள்ளது.
உயிரித் தொழில்நுட்ப மருந்துகள், இன்சுலின் வகைகள், ஜிஎல்பி-1 மருந்துகளில் கவனம் செலுத்தும் எரிஸ் லைஃப் சயின்சஸுக்கு ரூ.1,709 இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது 45 சதவீத உயர்வு வாய்ப்பைக் குறிக்கிறது.


அதிக லாபம் தரும் பேக்கேஜிங் பிரிவுகளின் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு, மோல்டு-டெக் பேக்கேஜிங்குக்கு ரூ.480 இலக்கும், 52 சதவீத உயர்வு வாய்ப்பும் கணிக்கப்பட்டுள்ளது.


வீவொர்க் இந்தியா இரண்டாம் காலாண்டில் 11,700 பணியிடங்களைச் சேர்த்தது. இதன் மூலம் அதன் மொத்த பணியிடத் திறன் 27 சதவீதம் உயர்ந்து 1.45 லட்சத்தைக் கடந்தது. இப்பங்குக்கு ரூ.983 இலக்கு விலையையும், 48 சதவீத உயர்வு வாய்ப்பையும் நிர்மல் பாங் கணித்துள்ளது.


முந்தைய செய்தி
ஊழலின் ஊற்றுக்கண் திமுக என்பது உறுதியாகியுள்ளது: CM Vijay
அடுத்த செய்தி
ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ.1,800 இலக்கு

தொடர்புடைய செய்திகள்