Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

அனைத்து பொருட்களுக்கும் 8% சதவீத வரி நிர்ணயிக்க கோரிக்கை

அனைத்து பொருட்களுக்கும் 8% சதவீத வரி நிர்ணயிக்க கோரிக்கை

ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான நடப்பு நிதியாண்டில் மொத்த ஜிஎஸ்டி வசூல் 13.2 % உயர்ந்து ரூ.14.77 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

ஜிஎஸ்டி வரி முறையில் ஒரே சீரான வரி அடுக்காக, விலக்களிக்கப்பட்ட பொருட்கள் தவிர்த்து மற்ற பொருட்களுக்கு 8% வரி நிர்ணயிக்க வேண்டும் என தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம், மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக சங்கத் தலைவர் என்.ஜெகதீசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

டெல்லியில் கடந்த செப். 3-ம் தேதி நடைபெற்ற 56-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் 5%,12%,18%,28% ஆகிய நான்கு அடுக்கு வரி முறைகளில் இருந்த அனைத்து பொருட்களும் 5%, 18% ஆகிய இரு அடுக்கு வரி விகிதத்துக்குள் மாற்றப்பட்டன. இந்த இரு அடுக்கு வரிமுறையால் அரசின் வரி வருவாய் கணிசமாகக் குறையும் என்ற கருத்து நிலவியது.

ஆனால், நடைமுறையில் அதற்கு மாறாக நடந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ரூ.1,88,125 கோடியாக இருந்த மொத்த ஜிஎஸ்டி வருவாய், இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ரூ.2,31,290 கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் ரூ.43,165 கோடி (22.9%) அதிகமாகும். இதுவே இதுவரை பதிவான இரண்டாவது அதிகபட்ச மாதாந்திர வசூலாகும்.

ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான நடப்பு நிதியாண்டில் மொத்த ஜிஎஸ்டி வசூல் 13.2 % உயர்ந்து ரூ.14.77 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. இதன் மூலம், வரி விகிதங்களை குறைப்பதால் அரசின் வரி வருவாய் குறையும் என்ற கருத்து தவறானது என்பது நிரூபணமாகியுள்ளது.

எனவே, ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை மேலும் எளிமைப்படுத்தும் நோக்கில், விலக்களிக்கப்பட்ட பொருட்கள் தவிர மற்ற பொருட்களுக்கு ஒரே அடுக்கு வரி முறையாக (single slab) 8% சதவீத வரி விகிதம் நிர்ணயம் செய்வது குறித்து மத்திய அரசும், ஜிஎஸ்டி கவுன்சிலும் பரிசீலிக்க வேண்டும்.

மொத்தம் 148 கோடி மக்கள் தொகை உள்ள நம் நாட்டில் உள்நாட்டின் நுகர்வு மிக அதிகம். எனவே, இத்தகைய ஒரு அடுக்கு வரி விகித முறை அறிமுகப்படுத்தப்பட்டால், அரசுக்கு வரி வருவாய் இழப்பு ஏற்படாது. மாறாக வரி செலுத்துவோரின் எண்ணிக்கையும், வரி இணக்கமும் அதிகரித்து, வருவாய் மேலும் உயர வாய்ப்புகள் உருவாகும். 

மேலும், ஜிஎஸ்டி நடைமுறையில் தொழில் மற்றும் வர்த்தக துறையினர் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்னைகளுக்கும் தீர்வு காண முடியும். குறிப்பாக, ஜிஎஸ்டி வரி விதிப்பு மற்றும் வரி செலுத்தும் நடைமுறைகள் எளிமையடைவதுடன் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கும் பெரும் பயன் கிடைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி
செங்கல்பட்டில் ரூ.7,000 கோடியில் உலக வர்த்தக மையம்
அடுத்த செய்தி
தக்ஷின் குஜராத் விஜ்-ராஜேஷ் பவர் ரூ1,629 கோடியில் ஒப்பந்தம்

தொடர்புடைய செய்திகள்