Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

செங்கல்பட்டில் ரூ.7,000 கோடியில் உலக வர்த்தக மையம்

செங்கல்பட்டில் ரூ.7,000 கோடியில் உலக வர்த்தக மையம்
சென்னை ராயப்பேட்டையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜிடிபி டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் தலைவர் பாரத் காந்தி தோஷி, உலக வர்த்தக மைய சங்கத்தின் துணைத் தலைவர் ஸ்காட் வாங், ஜிடிபி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அருண் பாரதி அருணாச்சலம் (இடமிருந்து வலம்).

நிலம் கையகப்படுத்தும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அடுத்த 6 முதல் 12 மாதங்களுக்குள் இதன் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பகிரவும் WhatsApp Facebook

செங்கல்பட்டில் சுமார் ரூ.7,000 கோடி முதலீட்டில், 100 முதல் 150 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான 'தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைந்த நகரத்தை' அமைப்பதற்காக 'உலக வர்த்தக மைய சங்கத்தின் உரிமத்தை பெற்றுள்ளதாக ஜிடிபி டெவலப்பர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.


சென்னையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆசியா பசிபிக் பிராந்திய 'உலக வர்த்தக மைய சங்கத்தின் துணைத் தலைவர் ஸ்காட் வாங் மற்றும் ஜிடிபி டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் முன்னிலையில் இந்த அறிவிப்பு வெளியானது.

இந்த உலக வர்த்தக மையத் திட்டம் அடுத்த 10 ஆண்டுகளில் பல கட்டங்களாகச் செயல்படுத்தப்பட உள்ளது. இது வெறும் தொழிற்பேட்டையாக இல்லாமல், வணிக மற்றும் தகவல் தொழில்நுட்ப அலுவலகங்கள், நட்சத்திர விடுதிகள், குடியிருப்புகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தரவு மையங்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் அமையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அடுத்த 6 முதல் 12 மாதங்களுக்குள் இதன் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து ஜிடிபி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அருண் பாரதி அருணாச்சலம் பேசுகையில், "இந்த மெகா திட்டத்தின் மூலம் கட்டுமானம், தொழில்நுட்பம் மற்றும் சேவைத் துறைகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகும்" எனத் தெரிவித்தார். உலக வர்த்தக மைய சங்கத்தின் துணைத் தலைவர் ஸ்காட் வாங், ஜிடிபி நிறுவனத்தின் இந்த முன்னெடுப்பை வரவேற்று, திட்டத்தின் வெற்றிக்கு முழு ஆதரவு அளிக்கப்படும் என உறுதியளித்தார்.







முந்தைய செய்தி
தட்டுப்பாடின்றி ஆவின் இனிப்புகள்: அமைச்சர் அறிவுறுத்தல்
அடுத்த செய்தி
அனைத்து பொருட்களுக்கும் 8% சதவீத வரி நிர்ணயிக்க கோரிக்கை

தொடர்புடைய செய்திகள்