Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

16 லட்சம் விவசாயிகளுக்கு மண் வள அட்டைகள் விநியோகம்

16 லட்சம் விவசாயிகளுக்கு மண் வள அட்டைகள் விநியோகம்

தமிழகத்தில் வேளாண்மைத் துறையின் கீழ் மொத்தம் 37 மண் பரிசோதனை நிலையங்களும், 22 நடமாடும் மண் பரிசோதனை நிலையங்களும் செயல்படுகின்றன.

பகிரவும் WhatsApp Facebook

தமிழகத்தில் கடந்த 2021-2022 முதல் இதுவரை 15.577 லட்சம் விவசாயிகளுக்கு மண் வள அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.


மண்ணின் சத்துகள் மற்றும் தன்மையை அறிந்து, அதற்கேற்ப உரங்களைப் பயன்படுத்தி விவசாயிகள் செலவைக் குறைக்கவும், மண் வளத்தைப் பாதுகாக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. தேசிய மண் வள அட்டைத் திட்டத்துடன் தமிழக அரசின் திட்டங்களும் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இதற்காக தமிழகத்தில் வேளாண்மைத் துறையின் கீழ் மொத்தம் 37 மண் பரிசோதனை நிலையங்களும், 22 நடமாடும் மண் பரிசோதனை நிலையங்களும் செயல்படுகின்றன. விவசாயிகளிடமிருந்து பெறப்படும் மண் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு, மாதிரி பெறப்பட்ட நாளிலிருந்து 3 நாளில் முடிவுகள் வழங்கப்படுகின்றன.

மண்ணில் உள்ள பேரூட்டச்சத்துகள், நுண்ணூட்டச்சத்துகள் உள்ளிட்டவற்றைக் கண்டறிய ஒரு மண் மாதிரிக்கு ரூ.30 கட்டணமும், பாசன நீர் மாதிரிக்கு ரூ.30 கட்டணமும் சலுகை அடிப்படையில் வசூலிக்கப்படுவதாக வேளாண்மைத் துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மண் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் மண்ணின் கார, அமிலத் தன்மை, உப்பின் அளவு, சுண்ணாம்பின் அளவு, ஊட்டச்சத்துகளின் நிலை குறித்து விவசாயிகளுக்கு விளக்கப்படுகிறது. மேலும், மண்ணின் தன்மைக்கேற்ப உரமிடுதல், நுண்ணூட்டச்சத்து மேலாண்மை மற்றும் நிலச் சீர்திருத்தம் தொடர்பான பரிந்துரைகள் தொழில்நுட்ப வல்லுநர்களால் வழங்கப்படுகின்றன.

கிராம அளவில் விழிப்புணர்வு

மண் வள அட்டைகளின் முடிவுகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப உரங்களைப் பயன்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு கிராம வாரியாக விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. மண்ணில் கரிமச் சத்து அளவை அதிகரித்தல், பசுந்தாள் உரப் பயிர்கள் சாகுபடி, உயிர் இடுபொருள்கள் தயாரித்தல், பயிர்க் கழிவுகளை மறுசுழற்சி செய்தல் உள்ளிட்டவை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

மேலும், காலநிலை மாற்றத்துக்கு ஏற்ற நிலையான வேளாண் தொழில்நுட்பங்களைப் பின்பற்றுவது குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்படுகிறது. நடப்பாண்டில் தமிழ்நாடு மண் வளப் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் கலை நிகழ்ச்சிகளால், விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மண் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் உரங்களைப் பயன்படுத்தும் விவசாயிகளின் எண்ணிக்கை குறித்த தனிப்பட்ட விவரங்கள் இல்லை என வேளாண்மைத் துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நடப்பாண்டில் தமிழ்நாடு மண் வளப் பாதுகாப்பு இயக்கத்தில் ரூ.4 கோடியில் மேலும் 2 லட்சம் மண் வள அட்டைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக வேளாண்மை துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.


முந்தைய செய்தி
தனியார் திருமண மண்டபத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.15 லட்சம் மதிப்பிலான பட்டாசு பறிமுதல்
அடுத்த செய்தி
டௌரியன் நிறுவன லாபம் 2 மடங்கு உயர்வு

தொடர்புடைய செய்திகள்