Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஆஸ்திரேலியாவில் உயர்ந்த வட்டி விகிதம்

ஆஸ்திரேலியாவில் உயர்ந்த வட்டி விகிதம்

அடிப்படைப் பணவீக்கத்தைக் காட்டும் சரிசெய்யப்பட்ட சராசரி அளவும் 3.5 சதவீதத்திலிருந்து 3.6 சதவீதமாக உயர்ந்தது.

பகிரவும் WhatsApp Facebook

நீடிக்கும் பணவீக்க அழுத்தங்களைக் கட்டுப்படுத்த, ஆஸ்திரேலிய மத்திய வங்கி நேற்று முக்கிய வட்டி விகிதத்தை 0.25 சதவீதப் புள்ளி உயர்த்தி 4.85 சதவீதமாக நிர்ணயித்தது. இது 2008-க்குப் பிறகு அதிகபட்ச அளவாகும்.

2 நாள் நடைபெற்ற நாணய கொள்கை வாரிய கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. மத்திய கிழக்கு மோதலால் எரிபொருள் மற்றும் சரக்குகளின் விலைகள் அதிகரித்திருப்பது பணவீக்க அழுத்தங்களுக்கு காரணமாக இருப்பதாக ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

நடப்பாண்டில் வட்டி விகிதம் உயர்த்தப்படுவது இது 5-வது முறையாகும். முன்னதாக, பிப்ரவரி, மார்ச், மே, செப்டம்பர் மாதங்களில் தலா 0.25 சதவீதப் புள்ளி உயர்த்தப்பட்டது. அக்டோபர் 28-ல் வெளியான அதிகாரப்பூர்வத் தரவுகளின்படி, ஆண்டுப் பணவீக்கம் ஆகஸ்டில் இருந்த 4 சதவீதத்திலிருந்து செப்டம்பரில் 4.3 சதவீதமாக அதிகரித்தது.

இதையடுத்து, நாட்டின் நான்கு பெரிய வங்கிகளும் வட்டி உயர்வைக் கணித்திருந்தன.

அடிப்படைப் பணவீக்கத்தைக் காட்டும் சரிசெய்யப்பட்ட சராசரி அளவும் 3.5 சதவீதத்திலிருந்து 3.6 சதவீதமாக உயர்ந்தது. மத்திய வங்கியின் பணவீக்க இலக்கு 2 முதல் 3 சதவீதமாகும். 2027-ம் ஆண்டின் பெரும்பகுதியில் பணவீக்கம் உயர்ந்த நிலையிலேயே நீடிக்கும். இந்த ஆண்டு இறுதியில் இலக்கு வரம்பு அளவுக்கு திரும்பும் என்று வாரியம் தெரிவித்தது.

மத்திய கிழக்கு மோதலால் உலகளாவிய எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு, எரிசக்தி விலைகள் உயர்வதாகவும் எச்சரித்தது. உள்நாட்டு உற்பத்தித் திறன் மீதான அழுத்தங்களும் எதிர்பார்த்ததைவிட வலுவாக உள்ளன.

வட்டி உயர்வுக்கு ஆறு உறுப்பினர்கள் ஆதரவளித்தனர். 3 பேர் விகிதத்தை 4.60 சதவீதத்திலேயே தொடர விரும்பினர். அடுத்த கூட்டம் டிசம்பர் தொடக்கத்தில் நடைபெறவுள்ளது. எரிபொருள் விலை உயர்வின் தாக்கம் பிற பொருள்கள் மற்றும் சேவைகளின் விலைகளுக்கும் அதிகளவில் பரவி வருவதாக வாரியம் குறிப்பிட்டது. மத்திய கிழக்கில் நீடிக்கும் மோதல், பொருளாதார வளர்ச்சிக்கும் பணவீக்கத்துக்கும் மேலும் அபாயங்களை ஏற்படுத்துவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

முந்தைய செய்தி
Claims US is world's largest supplier of oil
அடுத்த செய்தி
Israel can form government without Arab parties: Lieberman

தொடர்புடைய செய்திகள்