Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

சிங்கப்பூரில் 3 புதிய மெட்ரோ நிலையங்கள்

சிங்கப்பூரில் 3 புதிய மெட்ரோ நிலையங்கள்

மூன்று புதிய மெட்ரோ ரயில் நிலையங்கள் திறக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியோ தெரிவித்தார்.

பகிரவும் WhatsApp Facebook

சிங்கப்பூரில் டிசம்பர் 26-ம் தேதி மூன்று புதிய மெட்ரோ ரயில் நிலையங்கள் திறக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியோ தெரிவித்தார்.

தாம்சன்–கிழக்குக் கடற்கரை வழித்தடத்தில் பெடோக் சவுத், டவுன்டவுன் வழித்தடத்தில் சிலின், இரு வழித்தடங்களையும் இணைக்கும் சுங்கை பெடோக் சந்திப்பு நிலையம் ஆகியவை திறக்கப்படுகின்றன.


இவை கிழக்கு சிங்கப்பூர் பயணிகளுக்குக் கூடுதல் பயண வாய்ப்புகளை வழங்குவதுடன், பயண நேரத்தையும் குறைக்கும் என்று சிங்கப்பூர் நகர்ப்புறப் போக்குவரத்து வார நிகழ்வில் அவர் கூறினார்.


மேற்கு பகுதி மக்களின் ரயில் அணுகலை மேம்படுத்தும் ஜூரோங் பிராந்திய வழித்தடம் 2028-ம் ஆண்டின் நடுப்பகுதியில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இணைப்புப் பேருந்துகளைச் சார்ந்திருக்கும் தேவை குறையும்.


கிராஸ் ஐலண்ட் வழித்தடம் 2030-களில் நிறைவடையும். தற்போது சிங்கப்பூரின் நகர்ப்புற ரயில் வலையமைப்பு எட்டு வழித்தடங்களில் மொத்தம் 275 கிலோமீட்டர் தொலைவுக்கு விரிந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.


முந்தைய செய்தி
New memberships invited for Tribal Welfare Boards
அடுத்த செய்தி
Free mock test coaching for TNPSC

தொடர்புடைய செய்திகள்