Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

துனிசியாவில் தீயால் அழிந்த வனப் பரப்பை மீட்டெடுக்க திட்டம்

துனிசியாவில் தீயால் அழிந்த வனப் பரப்பை மீட்டெடுக்க திட்டம்

இந்த திட்டத்தில் கார்க் ஓக், அலெப்போ பைன் காடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

பகிரவும் WhatsApp Facebook

துனிசியாவில் வனச் சூழலியலை மீட்டெடுத்து, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் திறனை அதிகரிக்க 30,000 ஹெக்டேரில் மீண்டும் காடுகளை உருவாக்கும் 2026–2035 ஆண்டுகளுக்கான செயல் திட்டம் ஏற்கப்பட்டுள்ளது.

கடந்த 2011–2025 காலகட்டத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயால் 74,602 ஹெக்டேர் வனப்பரப்பு அழிந்தது. இதனால் சுமார் 24.116 கோடி துனிசிய தினார் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் கார்க் ஓக், அலெப்போ பைன் காடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். உள்ளூர் காலநிலைக்கு ஏற்ற பூர்வீகத் தாவரங்கள் அறிமுகப்படுத்தப்படுவதுடன், வனக் கட்டமைப்புகளும் நவீனப்படுத்தப்படும்.


தீயை முன்கூட்டியே கண்டறிய மின்னணுத் தளங்கள், தானியங்கிக் கண்காணிப்புக் கோபுரங்கள் அமைக்கப்படும். உயரமான பகுதிகளில் நீர்த்தேக்கங்களும் உருவாக்கப்படும்.
2026–2027 பருவத்தில் 24,000 ஹெக்டேரில் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். இதில் 15,260 ஹெக்டேரில் இயற்கையான வன மீளுருவாக்கமும், 8,716 ஹெக்டேரில் வன மற்றும் மேய்ச்சல் நிலத் தாவர நடவும் இடம்பெறும்.


மேலும், ஒரு கோடி நாற்றுகளை உற்பத்தி செய்து நடவும், பத்து வன நாற்றங்கால்களின் கட்டமைப்புகளைப் புதுப்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.


தனியார் நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து 18 லட்சம் நாற்றுகள் நடப்படும். நீர்வளங்களைத் திரட்டுதல், காலநிலை நிதியைப் பெறுதல், சமூகப் பங்கேற்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். நவம்பர் 8 தேசிய மர தினம், ‘இன்று ஒரு மரம், நாளை ஒரு காடு’ என்ற முழக்கத்துடன் கொண்டாடப்படும்.


முந்தைய செய்தி
Indian-Americans make strong showing
அடுத்த செய்தி
மதுரை, திருச்சியில் ஃப்ளை 91 விமான சேவைக்கு வாய்ப்பு

தொடர்புடைய செய்திகள்