Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

பயணிகளை தவிக்கவிட்டு பறந்த சொகுசு கப்பல் - என்ன காரணம்?

பயணிகளை தவிக்கவிட்டு பறந்த சொகுசு கப்பல் - என்ன காரணம்?

சுமார் 100 பயணிகள் இன்னும் சிஹானுக்வில்லில் தங்கியுள்ளனர்.

பகிரவும் WhatsApp Facebook

எரிபொருள் செலவு கடுமையாக உயர்ந்ததால், மூன்றாண்டு உலகச் சுற்றுப்பயணத்தை பாதியில் நிறுத்திய அமெரிக்க சொகுசுக் கப்பல், பயணிகள் யாருமின்றி கம்போடியாவிலிருந்து புறப்பட்டது.

அமெரிக்காவின் வில்லா வீ ரெசிடென்சஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான ‘எம்வி ஒடிஸி’ சொகுசுக் கப்பல், 203 பயணிகளுடன் உலகைச் சுற்றிவந்தது. கடந்த அக்டோபர் 28-ம் தேதி கம்போடியாவின் சிஹானுக்வில் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்தபோது, பயணிகள் அனைவரும் சில மணி நேரத்துக்குள் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.


இதையடுத்து, செவ்வாய்க்கிழமை இரவு ஊழியர்களுடன் மட்டும் கப்பல் புறப்பட்டது. சுமார் 100 பயணிகள் இன்னும் சிஹானுக்வில்லில் தங்கியுள்ளனர். பெரும்பாலான பயணிகள் அமெரிக்கர்கள் ஆவர்.


ஈரான் போர் காரணமாக எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்ததே பயணம் நிறுத்தப்பட்டதற்குக் காரணம் என நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒரு அறைக்கான மாதாந்திர எரிபொருள் செலவு 1,800 டாலரிலிருந்து 6,000 முதல் 8,000 டாலராக அதிகரித்துள்ளது.


கப்பலில் வாழ்நாள் முழுவதும் தங்குவதற்காக சிலர் 3 லட்சம் டாலருக்கும் அதிகமாகச் செலுத்தியுள்ளனர். கடந்த 2024 அக்டோபரில் தொடங்கிய பயணம் திடீரென நிறுத்தப்பட்டது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கப்பலின் அடுத்த பயணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

முந்தைய செய்தி
சிங்கப்பூரில் சில்லறை விற்பனை 1.7% உயர்வு
அடுத்த செய்தி
Rising memory chip costs may push mobile prices up 30%

தொடர்புடைய செய்திகள்