Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

லாஸ் ஏஞ்சல்ஸின் புதிய மேயரானார் தமிழ் பூர்வக்குடியான நித்யா ராமன்

லாஸ் ஏஞ்சல்ஸின் புதிய மேயரானார் தமிழ் பூர்வக்குடியான நித்யா ராமன்
நித்யா ராமன்

கேரன் பாஸ்க்கு முதலில் ஆதரவு தெரிவித்த ராமன், வேட்புமனு தாக்கல் முடிவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு போட்டியில் இறங்கி, வெற்றி வாகை சூடியுள்ளார்.

பகிரவும் WhatsApp Facebook

அமெரிக்காவின் இரண்டாவது பெரிய நகரமான லாஸ் ஏஞ்சல்ஸின் மேயராக, இந்தியாவில் பிறந்த நித்யா ராமன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தற்போதைய மேயர் கேரன் பாஸ் 48 சதவீத வாக்குகளை பெற்றிருந்த நிலையில், நித்யா ராமன் 52 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.

தமிழ் பூர்வீகத்தைக் கொண்ட நித்யாராமன் கேரளாவில் பிறந்த நிலையில், 6 வயதில் குடும்பத்துடன் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தார். நகர திட்டமிடல் நிபுணர். வீடற்றோர் பிரச்சினை மற்றும் வீட்டுவசதிப் பற்றாக்குறை தொடர்பாகப் பணியாற்றிய அவர், வீட்டு வசதிச் செலவு, சாலைக் குழிகள், பழுதடைந்த தெருவிளக்குகள் உள்ளிட்ட அன்றாடப் பிரச்சினைகளைப் பிரச்சாரத்தில் முன்னிலைப்படுத்தினார்.

கேரன் பாஸ்க்கு முதலில் ஆதரவு தெரிவித்த ராமன், வேட்புமனு தாக்கல் முடிவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு போட்டியில் இறங்கி, வெற்றி வாகை சூடியுள்ளார்.

மேயர் நித்யா ராமன், 2010-ல் சென்னையில், 'டிரான்ஸ்பரன்ட் சென்னை' என்ற அமைப்பை தொடங்கி, அதன் தலைவராகச் செயல்பட்டு வந்ததாக எக்ஸ்னோரா அமைப்பின் உறுப்பினர் வி.ராமா ராவ் தெரிவித்துள்ளார். சமூக ஆர்வலராக அவர் நங்கநல்லூருக்கு வந்து அப்பகுதி மக்களிடம் போக்குவரத்துப் பிரச்னைகள் குறித்து கேட்டறிந்தார். 

இந்த அமைப்பு, நகர்ப்புறங்களில் உள்ள அடிப்படை வசதிக் குறைபாடுகள், போக்குவரத்துப் பிரச்னைகள், பொதுப் போக்குவரத்து மற்றும் பாதசாரிகள் பாதுகாப்பு தொடர்பான தகவல்களைச் சேகரித்து, போக்குவரத்துக் காவல் துறை மற்றும் மாநகராட்சியிடம் அளித்தது. இதன் மூலம் நகர்ப்புறப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதே அமைப்பின் நோக்கமாக இருந்தது என்றார்.

முந்தைய செய்தி
India briefs ASEAN envoys on maritime security
அடுத்த செய்தி
Videocon’s வேணுகோபால் திவாலானவர் என அறிவிப்பு

தொடர்புடைய செய்திகள்