Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

முகத்தின் மூலமாக திறக்கும் பெட்டகத்தை அறிமுகம் செய்த கோத்ரேஜ்

முகத்தின் மூலமாக திறக்கும் பெட்டகத்தை அறிமுகம் செய்த கோத்ரேஜ்

ஸ்மார்ட்போன், மடிக்கணினியை முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பம் மூலம் திறப்பதைப் போல, இனி வீட்டுப் பாதுகாப்புப் பெட்டகத்தையும் முகத்தைப் பயன்படுத்தி திறக்க முடியும்.

பகிரவும் WhatsApp Facebook

வீட்டில் உள்ள நகைகள், பணம் உள்ளிட்ட மதிப்புமிக்க பொருள்களைப் பாதுகாக்க முகத்தை அடையாளம் கண்டு திறக்கும் புதிய பாதுகாப்புப் பெட்டகத்தை கோத்ரேஜ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

கோத்ரேஜ் எண்டர்பிரைசஸ் குழுமத்தின் செக்யூரிட்டி சொல்யூஷன்ஸ் பிரிவு, ‘NX Pro Ncrypt’ என்ற இந்தப் புதிய பெட்டகத்தை அறிமுகப்படுத்தும் வகையில், ‘உங்கள் முகமே சாவி’ என்ற விளம்பரப் பிரச்சாரத்தையும் தொடங்கியுள்ளது.

தற்போது ஸ்மார்ட்போன், மடிக்கணினி போன்ற சாதனங்களை முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பம் மூலம் திறப்பதைப் போல, இனி வீட்டுப் பாதுகாப்புப் பெட்டகத்தையும் முகத்தைப் பயன்படுத்தி திறக்க முடியும். இந்த வசதியை விளக்கும் வகையில் விளம்பரப் படமும் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து நிறுவனத்தின் செக்யூரிட்டி சொல்யூஷன்ஸ் பிரிவு வணிகத் தலைவர் புஷ்கர் கோகலே கூறுகையில், "மக்கள் ஏற்கெனவே பயன்படுத்திப் பழகிய முக அங்கீகாரத் தொழில்நுட்பத்தை வீட்டுப் பாதுகாப்பிலும் அறிமுகப்படுத்தியுள்ளோம். இதனால் பாதுகாப்பை எளிதாகவும் வசதியாகவும் மாற்றுவதே நோக்கம்" என்றார்.

இந்த விளம்பரப் பிரச்சாரம் Adfactors PR நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் தளங்கள் மற்றும் நாடு முழுவதும் இந்தப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட உள்ளது.

முந்தைய செய்தி
ஃபைசர் நிறுவன நிகர லாபம் 65.7% உயர்வு
அடுத்த செய்தி
Tasmac outlets reopen in Karur district

தொடர்புடைய செய்திகள்