Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஃபைசர் நிறுவன நிகர லாபம் 65.7% உயர்வு

ஃபைசர் நிறுவன நிகர லாபம் 65.7% உயர்வு

காலாண்டில் ஈட்டிய ரூ.189 கோடியுடன் ஒப்பிடுகையில் 65.72 சதவீதம் அதிகமாகும்.

பகிரவும் WhatsApp Facebook

மருந்து தயாரிப்பு நிறுவனமான ஃபைசர் லிமிடெட், நடப்பு நிதியாண்டின் செப்டம்பர் காலாண்டில் ரூ.313.25 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. இது கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் ஈட்டிய ரூ.189 கோடியுடன் ஒப்பிடுகையில் 65.72 சதவீதம் அதிகமாகும்.


அமெரிக்காவைச் சேர்ந்த தாய் நிறுவனமான ஃபைசர் இன்க்., மினிபிரஸ் எக்ஸ்எல் மருந்து விற்பனை தொடர்பாக ரூ.132.06 கோடி சிறப்பு ஆதாயத்தைப் பெற்றுள்ளது. இந்தக் கூடுதல் ஆதாயம் நிறுவனத்தின் நிகர லாப உயர்வுக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. இதன் தொடர்ச்சியாக, கடந்த செப்.7-ம் தேதி முதல் மினிபிரஸ் எக்ஸ்எல் மருந்து உற்பத்தியை ஃபைசர் லிமிடெட் நிறுவனம் நிறுத்தியுள்ளது.

மதிப்பாய்வு காலாண்டில், சிறப்பு ஆதாயங்களைக் கணக்கில் கொள்ளாத வரிக்கு முந்தைய லாபம் ரூ.290.77 கோடியாக இருந்தது. இது கடந்த ஆண்டு இதே காலாண்டின் ரூ.255.37 கோடியுடன் ஒப்பிடுகையில் 13.86 சதவீதம் உயர்வாகும்.

நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.684.19 கோடியிலிருந்து ரூ.774.19 கோடியாக அதிகரித்துள்ளது. அதேநேரத்தில், மொத்த செலவினம் ரூ.428.82 கோடியிலிருந்து ரூ.483.2 கோடியாக உயர்ந்துள்ளது.

முந்தைய செய்தி
NSE Q2 நிகர லாபம் 23% உயர்வு
அடுத்த செய்தி
முகத்தின் மூலமாக திறக்கும் பெட்டகத்தை அறிமுகம் செய்த கோத்ரேஜ்

தொடர்புடைய செய்திகள்