Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

NSE Q2 நிகர லாபம் 23% உயர்வு

NSE Q2 நிகர லாபம் 23% உயர்வு

மொத்த வருவாய் 9 சதவீதம் உயர்ந்து ரூ.4,554 கோடியாக உள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

தேசிய பங்குச் சந்தையான என்எஸ்இ, நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் ரூ.2,578 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தைவிட 23 சதவீதம் அதிகமாகும்.


நிறுவனத்தின் மொத்த வருவாய் 9 சதவீதம் உயர்ந்து ரூ.4,554 கோடியாக உள்ளது. பங்குச் சந்தை வர்த்தகம் அதிகரித்ததால், பரிவர்த்தனைக் கட்டண வருவாய் 9 சதவீதம் உயர்ந்து ரூ.3,035 கோடியாகியுள்ளது.

இதற்கிடையே, என்எஸ்இயின் மொத்தச் செலவுகள் 51 சதவீதம் குறைந்து ரூ.1,161 கோடியாக உள்ளன. கடந்த ஆண்டு இதே காலாண்டில் செபி தொடர்பான தீர்வுக்காக ரூ.1,297 கோடி ஒதுக்கப்பட்டதே செலவுகள் அதிகமாக இருந்ததற்குக் காரணம்.

செலவுகள் குறைந்ததால், செயல்பாட்டு லாபம் 107 சதவீதம் உயர்ந்து ரூ.3,079 கோடியாக அதிகரித்துள்ளது. இதன் லாப விகிதம் 76 சதவீதமாக உள்ளது.

நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் ரூ.5,698 கோடி நிகர லாபமும், ரூ.9,807 கோடி வருவாயும் ஈட்டியுள்ளதாக என்எஸ்இ தெரிவித்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் வரிகள் மற்றும் கட்டணங்கள் மூலம் அரசுக்கு ரூ.41,234 கோடி பங்களித்துள்ளது.


முந்தைய செய்தி
உலக விஞ்ஞானிகள் பட்டியலில் 99 விஐடி பேராசிரியர்
அடுத்த செய்தி
ஃபைசர் நிறுவன நிகர லாபம் 65.7% உயர்வு

தொடர்புடைய செய்திகள்