Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

உலக விஞ்ஞானிகள் பட்டியலில் 99 விஐடி பேராசிரியர்

உலக விஞ்ஞானிகள் பட்டியலில் 99 விஐடி பேராசிரியர்
தலைசிறந்த விஞ்ஞானிகளின் பட்டியலில், 99 பேராசிரியர்கள் இடம் பெற்றுள்ளது குறித்து விஐடி பல்கலைக்கழக வேந்தர் விசுவநாதன் தெரிவித்தார். அருகில், துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், செயல் இயக்குனர் சந்தியாபெண்டா ரெட்டி, துணைவேந்தர் காஞ்சனா பாஸ்கரன்.

உலகின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 99 பேராசிரியர்கள் இடம்பெற்றுள்ளனர்

பகிரவும் WhatsApp Facebook

உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகளின் பட்டியலில் விஐடி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 99 பேராசிரியர்கள் இடம் பிடித்துள்ளனர் என்று விஐடி வேந்தர் விசுவநாதன் தெரிவித்துள்ளார்.


வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில், வேந்தர் விசுவநாதன் கூறியதாவது: விஐடி பல்கலைக்கழக 4 வளாகங்களிலும் ஒரு லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். உலகின் தலைசிறந்த 2 சதவீத விஞ்ஞானிகள் பட்டியலில் விஐடி பல்கலைக்கழகத்தை சேர்ந்த 99 பேராசிரியர்கள் இடம் பிடித்து சிறப்பு சேர்த்துள்ளனர்.

நிகழாண்டில் முதல்முறையாக அதிகபட்சமாக ரூ.1.45 கோடி ஊதியத்திற்கு விஐடி மாணவர்கள் வேலை வாய்ப்பு பெற்று சிறப்பு சேர்த்து உள்ளனர். மொத்தம் 12,329 பேர் பல்வேறு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஆணை பெற்றுள்ளனர். தேசிய கல்வி நிறுவன தரவரிசை பட்டியல் 2025ல் சிறந்த பல்கலைக்கழக தர வரிசையில் 14வது இடத்திலும், சிறந்த பொறியியல் பாடப்பிரிவில் 16வது இடமும், ஆராய்ச்சியில் 14வது இடமும் பிடித்துள்ளது. ஒட்டுமொத்த தரவரிசை பட்டியலில் 21வது இடம் பிடித்துள்ளது.

ஏழை மாணவர்களின் இலவச கல்விக்கு சுமார் ரூ.103 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளை சார்பில் இதுவரை 4 மாவட்டங்களை சேர்ந்த11,158 மாணவர்களுக்கு ரூ.14.24 கோடிக்கு மேல் உயர்கல்விக்கு உதவித்தொகையாக வழங்கப்பட்டுள்ளது இவ்வாறு கூறினார்.

 
முந்தைய செய்தி
Centre’s FY27 fiscal deficit may exceed target by ₹1.2 lakh crore
அடுத்த செய்தி
NSE Q2 நிகர லாபம் 23% உயர்வு

தொடர்புடைய செய்திகள்