Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

தனியார் புரமோட்டர்கள் பங்கு 3 ஆண்டு உச்சம்

தனியார் புரமோட்டர்கள் பங்கு 3 ஆண்டு உச்சம்

முந்தைய காலாண்டில் நிகர கொள்முதல் ரூ.36,336 கோடியாக இருந்தது.

பகிரவும் WhatsApp Facebook

பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் தனியார் புரமோட்டர்களின் மொத்தப் பங்கு செப்டம்பர் காலாண்டில் 41.93 சதவீதமாக உயர்ந்தது. இது மூன்று ஆண்டுகளில் அதிகபட்சம் என பிரைம் டேட்டாபேஸ் குழுமம் தெரிவித்துள்ளது.

ஜூன் காலாண்டில் 41.34 சதவீதமாக இருந்த இவர்களின் பங்கு, தொடர்ந்து இரண்டாவது காலாண்டாக உயர்ந்துள்ளது. செப்டம்பர் காலாண்டில் தனியார் புரமோட்டர்கள் நிகரமாக ரூ.6,595 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கினர். தொடர்ந்து நான்காவது காலாண்டாக அவர்களின் பங்கு கொள்முதல் விற்பனையைவிட அதிகமாக இருந்தது. முந்தைய காலாண்டில் நிகர கொள்முதல் ரூ.36,336 கோடியாக இருந்தது.


கடந்த 2021 டிசம்பரில் 45.15 சதவீதமாக இருந்த தனியார் புரமோட்டர்களின் மொத்தப் பங்கு, அதன் பிறகு சரிவுப் போக்கில் இருந்தது. செப்டம்பர் காலாண்டில் இந்தியத் தனியார் புரமோட்டர்களின் பங்கு 32.92 சதவீதமாகவும், வெளிநாட்டுப் புரமோட்டர்களின் பங்கு 9 சதவீதமாகவும் உயர்ந்தது. புரமோட்டர்கள் தொடர்ந்து பங்குகளை வாங்குவது, சந்தை அதன் அடிமட்டத்தை நெருங்குவதற்கான அறிகுறியாக இருக்கலாம் என குழுமத்தின் நிர்வாக இயக்குநர் பிரணவ் ஹல்தியா தெரிவித்தார்.


தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் உள்நாட்டுப் பரஸ்பர நிதிகளின் பங்கு தொடர்ந்து 13-வது காலாண்டாக அதிகரித்து, இதுவரை இல்லாத அளவுக்கு 11.82 சதவீதத்தை எட்டியது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்களின் பங்கு 15.91 சதவீதத்திலிருந்து 15.57 சதவீதமாகக் குறைந்தது. இது 14 ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவாகும்.


காப்பீட்டு நிறுவனங்களின் பங்கு 5.18 சதவீதத்திலிருந்து 5.05 சதவீதமாகக் குறைந்தபோதும், உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் மொத்தப் பங்கு 19.31 சதவீதமாக உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியது.

முந்தைய செய்தி
SoftBank sinks into losses as AI bets falter
அடுத்த செய்தி
JLR sees India as key growth market, to launch first EV in 2027: MD

தொடர்புடைய செய்திகள்