Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

முத்தூட் ஃபைனான்ஸ் ஒருங்கிணைந்த லாபம் 39% உயர்வு

முத்தூட் ஃபைனான்ஸ் ஒருங்கிணைந்த லாபம் 39% உயர்வு

நிறுவனத்தின் ஒருங்கிணைந்த தங்கக் கடன் சொத்து மதிப்பு 46 சதவீதம் உயர்ந்து ரூ.1,93,212 கோடியாக அதிகரித்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த கடன் சொத்து மதிப்பு, கடந்த செப்டம்பர் 30-ம் தேதி நிலவரப்படி, ஆண்டுக்கு ஆண்டு 42 சதவீதம் அதிகரித்து ரூ.2,09,317 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டின் முதல் அரையாண்டில் இது ரூ.1,47,673 கோடியாக இருந்தது.

நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வரிக்குப் பிந்தைய லாபம் ரூ.4,386 கோடியிலிருந்து 39 சதவீதம் உயர்ந்து ரூ.6,103 கோடியாக அதிகரித்துள்ளது.

இதேபோல, நிறுவனத்தின் தனிப்பட்ட கடன் சொத்து மதிப்பு 42 சதவீதம் உயர்ந்து ரூ.1,87,810 கோடியாக உள்ளது. தனிப்பட்ட வரிக்குப் பிந்தைய லாபம் 26 சதவீதம் அதிகரித்து ரூ.5,527 கோடியாக உயர்ந்துள்ளது.

நிறுவனத்தின் ஒருங்கிணைந்த தங்கக் கடன் சொத்து மதிப்பு 46 சதவீதம் உயர்ந்து ரூ.1,93,212 கோடியாக அதிகரித்துள்ளது. தனிப்பட்ட தங்கக் கடன் சொத்து மதிப்பு ரூ.61,214 கோடியாக உள்ளது.

செப்டம்பர் 30-ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டு மற்றும் அரையாண்டுக்கான தணிக்கை செய்யப்படாத நிதி முடிவுகளை ஆய்வு செய்து ஒப்புதல் அளிப்பதற்காக, முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் குழுக் கூட்டம் நடைபெற்றது.

இதுகுறித்து நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அலெக்சாண்டர் ஜார்ஜ் முத்தூட் கூறும்போது, "பாதுகாப்பான கடன்களுக்கான தேவை அதிகரிப்பு மற்றும் முறைப்படுத்தப்பட்ட வங்கிச் சேவைகள் சார்ந்த கடன்களின் வளர்ச்சி ஆகியவற்றால், இந்தியாவின் தங்கக் கடன் சந்தையில் தொடர்ந்து வளர்ச்சி வாய்ப்புகள் உருவாகி வருகிறது" என்றார்.

முந்தைய செய்தி
145.07 மில்லியன் டன் சரக்குகளை கையாண்ட ரயில்வே
அடுத்த செய்தி
தனியார் திருமண மண்டபத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.15 லட்சம் மதிப்பிலான பட்டாசு பறிமுதல்

தொடர்புடைய செய்திகள்