Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

145.07 மில்லியன் டன் சரக்குகளை கையாண்ட ரயில்வே

145.07 மில்லியன் டன் சரக்குகளை கையாண்ட ரயில்வே

மின் உற்பத்தி நிலையங்களின் தேவையைப் பூர்த்தி செய்ய உள்நாட்டுக் நிலக்கரி போக்குவரத்தை ரயில்வே அதிகரித்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

இந்திய ரயில்வே, கடந்த அக்டோபரில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 145.07 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டுள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் 133.93 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்ட நிலையில், நடப்பாண்டில் 8.32 சதவீதம் வளர்ச்சி பதிவாகியுள்ளது என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அக்டோபரில் பல்வேறு முக்கியப் பொருள்களின் சரக்குப் போக்குவரத்தும் அதிகரித்துள்ளது. உணவு தானியங்கள் 26.3 சதவீதம், உள்நாட்டுக் நிலக்கரி 16 சதவீதம், இதர சரக்குகள் 11 சதவீதம், கிளிங்கர் 10.4 சதவீதம், உள்நாட்டு சரக்குப் பெட்டகங்கள் 6.3 சதவீதம், இரும்புத் தாது 5 சதவீதம், கனிம எண்ணெய் 1.9 சதவீதம், தயாரிக்கப்பட்ட எஃகு 0.5 சதவீதம் என போக்குவரத்தில் வளர்ச்சி கண்டுள்ளன.

மின் உற்பத்தி நிலையங்களின் தேவையைப் பூர்த்தி செய்ய உள்நாட்டுக் நிலக்கரி போக்குவரத்தை ரயில்வே அதிகரித்துள்ளது. இதன்படி, கடந்த அக்டோபரில் நாளொன்றுக்கு சராசரியாக 469.8 சரக்கு ரயில் தொடர்களில் நிலக்கரி கொண்டு செல்லப்பட்டது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் இந்த எண்ணிக்கை 393.2-ஆக இருந்தது. இதனால் 19.5 சதவீதம் வளர்ச்சி பதிவாகியுள்ளது.

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான முதல் ஏழு மாதங்களில், ரயில்வே 978.78 மில்லியன் டன் சரக்குகளைக் கையாண்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 935.10 மில்லியன் டன்னாக இருந்த நிலையில், தற்போது 4.67 சதவீதம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

பயணிகள் போக்குவரத்திலும் அக்டோபர் மாதத்தில் வளர்ச்சி பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் 63.52 கோடி பயணிகள் ரயில்களில் பயணம் செய்த நிலையில், நடப்பாண்டில் இந்த எண்ணிக்கை 64.72 கோடியாக அதிகரித்துள்ளது.

மேலும், நடப்பாண்டு ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் 443.8 கோடி பயணிகளை ரயில்வே கையாண்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 431.4 கோடியாக இருந்தது. இதில், புறநகர் அல்லாத ரயில் பயணிகள் பிரிவில் 4.2 சதவீதமும், புறநகர் ரயில் பயணிகள் பிரிவில் 1.7 சதவீதமும் வளர்ச்சி பதிவாகியுள்ளது.

முந்தைய செய்தி
ரூ.100க்கு 2.5 கிலோ காய்கறி - சிறப்பு திட்டம்
அடுத்த செய்தி
முத்தூட் ஃபைனான்ஸ் ஒருங்கிணைந்த லாபம் 39% உயர்வு

தொடர்புடைய செய்திகள்