Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ரூ.100க்கு 2.5 கிலோ காய்கறி - சிறப்பு திட்டம்

ரூ.100க்கு 2.5 கிலோ காய்கறி - சிறப்பு திட்டம்

இன்று முதல் 7-ம் தேதி வரை 3 நாள் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

பகிரவும் WhatsApp Facebook

தீபாவளியை முன்னிட்டு பொதுமக்களுக்கு குறைந்த விலையில் காய்கறிகளை விநியோகிக்க கூட்டுறவுத்துறை சார்பில் சிறப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 10 வகையான காய்கறிகள் அடங்கிய தொகுப்பு ரூ100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் பிறப்பித்துள்ள உத்தரவுப்படி, இன்று முதல் 7-ம் தேதி வரை 3 நாள் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள 218 நியாயவிலைக் கடைகள், கூட்டுறவுப் பண்டகசாலைகள், 4 நடமாடும் காய்கறி வாகனங்களில் விற்பனை செய்யப்படுகிறது. காலை 8 மணி முதல் விற்பனை தொடங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த தொகுப்பில் பெரிய வெங்காயம் 500 கிராம், தக்காளி 500 கிராம், கத்தரிக்காய் 250 கிராம், உருளைக்கிழங்கு 250 கிராம், கேரட் 200 கிராம், பீன்ஸ் 200 கிராம், பச்சை மிளகாய் 100 கிராம், எலுமிச்சை 100 கிராம், இஞ்சி 50 கிராம், தேங்காய் 400 முதல் 450 கிராம் வரை இடம்பெறும். மொத்தம் சுமார் 2.5 முதல் 2.6 கிலோ வரை காய்கறிகள் வழங்கப்படும்.


காய்கறிகள் தரமானதாகவும் அழுகல் இல்லாமலும் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு தொகுப்பு ரூ.100 என்ற விலையில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். தனித்தனியாகப் பிரித்து விற்பனை செய்யக்கூடாது. 


வேறு பொருட்களை வாங்கினால் தான் காய்கறித் தொகுப்பு வழங்கப்படும் என நிர்பந்திக்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. காய்கறிகளின் கொள்முதல் விலைக்கும் விற்பனை விலைக்கும் இடையிலான வித்தியாச தொகையை கூட்டுறவு கல்வி நிதியால் ஈடுசெய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி
தீபாவளி உற்சாகத்தில் பங்குச்சந்தை; சென்செக்ஸ் 384 புள்ளிகள் உயர்வு
அடுத்த செய்தி
145.07 மில்லியன் டன் சரக்குகளை கையாண்ட ரயில்வே

தொடர்புடைய செய்திகள்