Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

இத்தாலி பிரதமருடன் டாடா சன்ஸ் தலைவர் சந்திப்பு

இத்தாலி பிரதமருடன் டாடா சன்ஸ் தலைவர் சந்திப்பு

பின்நர், டூரின் நகரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சந்திரசேகரன் இந்த ஒப்பந்தத்துக்கு துணைநின்ற இத்தாலிய அரசுக்கும், பிரதமர் மெலோனிக்கும் நன்றி தெரிவித்தார்.

பகிரவும் WhatsApp Facebook

இத்தாலியின் ஐவேகோ குழுமத்தை டாடா மோட்டார்ஸ் வாங்கியுள்ளதைத் தொடர்ந்து, டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன் அந்நாட்டுப் பிரதமர் ஜார்ஜியா மெலோனியை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இத்தாலியின் முன்னணி வணிக வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஐவேகோ குழுமத்தின் 89.42 சதவீத பங்குகளை சுமார் 3.43 பில்லியன் யூரோவுக்கு வாங்கியுள்ளதாக டாடா மோட்டார்ஸ் அறிவித்திருந்தது. இதையடுத்து, இத்தாலியின் ரோமில் உள்ள பலாஸ்ஸோ சிகியில் அந்நாட்டு பிரதமர் ஜார்ஜியா மெலோனியை, டாடா சன்ஸ் தலைவர் சந்திர சேகரன் நேரில் சந்தித்தார்.

இந்த சந்திப்பில், இந்தியா-இத்தாலி இடையேயான தொழில் மற்றும் பொருளாதாரக் கூட்டுறவு அதிகரித்து வரும் சூழலில், டாடா குழுமத்தின் எதிர்கால உத்திகள் குறித்து பிரதமரிடம் சந்திரசேகரன் விரிவாக விளக்கினார்.

பின்நர், டூரின் நகரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சந்திரசேகரன் இந்த ஒப்பந்தத்துக்கு துணைநின்ற இத்தாலிய அரசுக்கும், பிரதமர் மெலோனிக்கும் நன்றி தெரிவித்தார். மேலும், 1990-களில் ரத்தன் டாடா இந்தியாவின் முதல் பயணிகள் காரை வடிவமைக்க டூரின் நகரைத் தேர்ந்தெடுத்த வரலாற்று நினைவுகளையும் கூறினார்.

இந்த கையகப்படுத்துதல் மூலம் இரு நிறுவனங்களும் இணைந்து 130-க்கும் மேற்பட்ட நாடுகளில் வர்த்தகத்தை விரிவுபடுத்தி, உலகளாவிய வணிக வாகனச் சந்தையில் பெரும் ஆதிக்கம் செலுத்தத் திட்டமிட்டுள்ளன. இதன்மூலம் நிறுவனங்களின் ஒருங்கிணைந்த வருவாய் சுமார் ரூ.2.28 லட்சம் கோடியாக (21 பில்லியன் யூரோ) உயரும் என்றும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் வர்த்தகம் பலமடங்கு வளர்ச்சி காணும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி
VP stresses industry-academia partnership for net-zero goal
அடுத்த செய்தி
மேட்டூர் அணைக்கு 5,586 கன அடி நீர்வரத்து!

தொடர்புடைய செய்திகள்