Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

மேட்டூர் அணைக்கு 5,586 கன அடி நீர்வரத்து!

மேட்டூர் அணைக்கு 5,586 கன அடி நீர்வரத்து!

மொத்தம் 120 அடியைக் கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 56.930 அடியை எட்டியது

பகிரவும் WhatsApp Facebook

மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

புதன்கிழமை காலை விநாடிக்கு 4,614 கன அடியாக இருந்த நீர்வரத்து, அன்று மாலை 4 மணிக்கு 4,993 கன அடியாக அதிகரித்தது. தொடர்ந்து பெய்த மழையால் நேற்று காலை நீர்வரத்து 5,586 கன அடியாக உயர்ந்தது.


மொத்தம் 120 அடியைக் கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 56.930 அடியை எட்டியது. இதேபோல, அணையின் நீர் இருப்பு புதன்கிழமை காலை 22.066 டி.எம்.சி.யாக இருந்த நிலையில், வியாழக்கிழமை காலை 22.453 டி.எம்.சி.யாக அதிகரித்தது. நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் வியாழக்கிழமை காலை நிலவரப்படி 68.4 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. 

அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள போதிலும், காவிரி ஆற்றில் விநாடிக்கு 1,000 கன அடி நீர் மட்டுமே திறக்கப்படுகிறது. கால்வாய்ப் பாசனத்துக்கு நீர் திறக்கப்படவில்லை.

முந்தைய செய்தி
இத்தாலி பிரதமருடன் டாடா சன்ஸ் தலைவர் சந்திப்பு
அடுத்த செய்தி
ஹாங்காங் ஜனநாயக ஆர்வலருக்கு 10 ஆண்டுகள் சிறை

தொடர்புடைய செய்திகள்