Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஹால்மார்க் இல்லாத ரூ.3 கோடி தங்க நகைகள் பறிமுதல்

ஹால்மார்க் இல்லாத ரூ.3 கோடி தங்க நகைகள் பறிமுதல்

கோவையில் சில கடைகளில் ஹால் மார்க் முத்திரை இல்லாமல் தங்க நகைகள் விற்கப்படுவதாக புகார்கள் எழுந்தன.

பகிரவும் WhatsApp Facebook

இந்தியத் தர நிர்ணய அமைப்பு, கடந்த 2001-ம் ஆண்டு முதல் நகைக் கடைகள் ஹால் மார்க் முத்திரை பதித்த தங்க நகைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என அறிவித்து இருந்தது. இதன்படி, முக்கோண வடிவமான இந்தியத் தர நிர்ணய அமைப்பின் அதிகார பூர்வமான முத்திரை, தங்கத்தின் தூய்மையை

குறிப்பிடுகின்ற எத்தனை காரட் என்பதனையும் HUID எண் எனும் 6 இலக்க தனத்துவம் மிக்க ஆல்பா நியூமரி குறியீடு ( எண்ணும் எழுத்தும் கலந்தது) ஆகிய 3-ம் நகைகளில் கட்டாயம் குறிக்கப்பட்டிருக்க வேண்டும் என எச்சரித்து இருந்தது.

இந்நிலையில், கோவையில் சில கடைகளில் ஹால் மார்க் முத்திரை இல்லாமல் தங்க நகைகள் விற்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதனடிப்படையில் நேற்று முன்தினம் கோவை டவுண்ஹால்,பெரியகடை வீதி, ராஜவீதி, பிரகாஷம் வீதி உள்ளிட்ட பகுதிகளில் இந்தியத் தர நிர்ணய அமைப்பின் கோவை கிளையின் இயக்குனர் ரமேஷ் தலை்மையில் 8-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

இதில், 4 நகைக் கடைகளில் ஹால்மார்க் முத்திரை மற்றும் காரட் குறித்த குறியீடு இல்லாத 2 கிலோ 85 கிராம் எடையிலான தங்க நகைகளை கண்டறிந்து அவற்றை பறிமுதல் செய்தனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.3 கோடியாகும். நுகர்வோர்களுக்கு ஹால்மார்க் முத்திரை இன்றி நகைகளை விற்பனை செய்வது தவறு. இதுகுறித்து கண்டறியப்பட்டால் நகை வியாபாரிகள் மீது சட்டப்படியான வழக்கு தொடர்வதன் மூலம் ஓராண்டு சிறை தண்டனை அல்லது பறிமுதல் செய்கின்ற நகையின் மதிப்பினை போல 5 மடங்கு அபராதம் செலுத்த வேண்டும் என இந்தியத் தர நிர்ணய அமைப்பின் கோவை கிளை இயக்குனர் ரமேஷ் கூறினார்.
முந்தைய செய்தி
சுந்தரம் ஃபைனான்ஸ் Q2 நிகர லாபம் 6% உயர்வு
அடுத்த செய்தி
Emirates Group H1 profit falls 66% to AED 4.1 bn

தொடர்புடைய செய்திகள்