Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

4 நாடுகளின் கூட்டு கடற்படை பயிற்சி தொடக்கம்

4 நாடுகளின் கூட்டு கடற்படை பயிற்சி தொடக்கம்

விழாவில் பேசிய ஜப்பான் கடற்படைத் தளபதி கட்சுஷி ஓமாச்சி, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்புச் சூழல் நாளுக்கு நாள் சிக்கலாகி வருவதாகத் தெரிவித்தார்.

பகிரவும் WhatsApp Facebook

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளின் கடற்படைகள் பங்கேற்கும் ‘மலபார்’ கூட்டுப் போர்ப் பயிற்சி நேற்று தொடங்கியது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகே உள்ள கான்டோ பிராந்தியக் கடற்பகுதியில் இந்தப் பயிற்சி நடைபெறுகிறது. நவம்பர் 12-ம் தேதி வரை நடைபெறும் பயிற்சியில் நீர்மூழ்கிக் கப்பல்களின் தாக்குதல்களை எதிர்கொள்வது, எதிரி போர்க்கப்பல்களைச் சமாளிப்பது உள்ளிட்ட பல்வேறு கடற்படை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
டோக்கியோ அருகேயுள்ள யோகோசுகா கடற்படைத் தளத்தில் நிறுத்தப்பட்டுள்ள ஜப்பானின் ‘இசே’ ஹெலிகாப்டர் தாங்கிக் கப்பலில் தொடக்க விழா நடைபெற்றது. இதில் நான்கு நாடுகளைச் சேர்ந்த சுமார் 200 பேர் பங்கேற்றனர்.

விழாவில் பேசிய ஜப்பான் கடற்படைத் தளபதி கட்சுஷி ஓமாச்சி, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்புச் சூழல் நாளுக்கு நாள் சிக்கலாகி வருவதாகத் தெரிவித்தார். ஒரே கருத்துடைய நாடுகளிடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது முன்னெப்போதையும்விட தற்போது முக்கியமானதாக உள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்தக் கூட்டுப் பயிற்சியில் ஜப்பானின் ‘மொகாமி’ போர்க்கப்பல், அமெரிக்காவின் கடற்படை வீரர்களை ஏற்றிச் செல்லும் போர்க்கப்பல் மற்றும் இந்தியா, ஆஸ்திரேலியாவின் போர்க்கப்பல்கள் பங்கேற்கின்றன.

கடந்த 1992-ம் ஆண்டு இந்தியா, அமெரிக்கா இடையிலான இருதரப்புக் கடற்படைப் பயிற்சியாக ‘மலபார்’ தொடங்கப்பட்டது. பின்னர் 2007-ம் ஆண்டு ஜப்பான் இதில் இணைந்தது. தற்போது நான்கு நாடுகளும் பங்கேற்கும் இந்தப் பயிற்சி, கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதுடன், கூட்டு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் திறனை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

முந்தைய செய்தி
DMK attempting to poach TVK MLAs, alleges Minister
அடுத்த செய்தி
ரத்த வங்கியில் சைபர் தாக்குதல் - வெப்பநிலையை உயர்த்திய அதிர்ச்சி சம்பவம்!

தொடர்புடைய செய்திகள்