Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ரத்த வங்கியில் சைபர் தாக்குதல் - வெப்பநிலையை உயர்த்திய அதிர்ச்சி சம்பவம்!

ரத்த வங்கியில் சைபர் தாக்குதல் - வெப்பநிலையை உயர்த்திய அதிர்ச்சி சம்பவம்!

வெப்பநிலை அதிகரித்தால் அவை பயன்படுத்த முடியாத நிலைக்குச் செல்லும் அபாயம் உள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

பிரான்சில் ரத்த வங்கியின் குளிர்சாதன அமைப்புக்குள் ஊடுருவிய ஹேக்கர்கள், அதன் வெப்பநிலையை அபாயகரமான அளவுக்கு உயர்த்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்சின் ரத்த சேவை அமைப்பான இஎப்எஸ் (EFS) கட்டுப்பாட்டில் உள்ள குளிர்சாதன அமைப்பு மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஹேக்கர்கள் தொலைவிலிருந்தே குளிர்சாதன அமைப்பைக் கட்டுப்படுத்தி, வெப்பநிலையை மிக அதிக அளவுக்கு உயர்த்தியுள்ளனர்.


மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படும் ரத்தப் பொருட்கள், உயிரியல் மாதிரிகள் குறிப்பிட்ட வெப்பநிலையில் பாதுகாக்கப்படுவது அவசியம். வெப்பநிலை அதிகரித்தால் அவை பயன்படுத்த முடியாத நிலைக்குச் செல்லும் அபாயம் உள்ளது.


எனினும், வெப்பநிலை மாற்றத்தை உடனடியாகக் கண்டறிந்த அதிகாரிகள், விரைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதனால் ரத்தப் பொருட்களும், மாதிரிகளும் பாதிக்கப்படாமல் தப்பின.


இதற்கிடையே, பிரான்சின் கிரெடிட் மியூச்சுவல் ஆர்கியா வங்கிக் குழுமமும் சைபர் தாக்குதலுக்கு உள்ளானது. இதில் மோசடியான பணப் பரிவர்த்தனைகள் நடைபெற்றன. உடனடியாக சில பரிவர்த்தனைகள் நிறுத்தப்பட்டன. வாடிக்கையாளர்களின் பணம் பாதுகாப்பாக இருப்பதாக வங்கி உறுதியளித்துள்ளது.


ஏற்கெனவே, ஐரோப்பிய நாடுகளின் பல்பொருள் அங்காடிகளில் உள்ள குளிர்சாதனப் பெட்டிகளும் இதேபோன்ற தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளன. தற்போது ரத்த வங்கியையும் ஹேக்கர்கள் குறிவைத்திருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

முந்தைய செய்தி
4 நாடுகளின் கூட்டு கடற்படை பயிற்சி தொடக்கம்
அடுத்த செய்தி
Kodiakkarai fishermen against boats from other districts

தொடர்புடைய செய்திகள்