Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

வண்ணத்துப்பூச்சிகளின் வலசை ரகசியம் தேடும் விஞ்ஞானிகள்

வண்ணத்துப்பூச்சிகளின் வலசை ரகசியம் தேடும் விஞ்ஞானிகள்

எங்கு உணவு தேடுகின்றன, இரவில் எங்கு தங்குகின்றன என்பதைக் கண்டறிவது ஆய்வின் நோக்கமாகும்.

பகிரவும் WhatsApp Facebook

வட அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் வலசை செல்லும் மோனார்க் வண்ணத்துப்பூச்சிகளின் பயணப் பாதைகளையும் ஓய்விடங்களையும் கண்டறிய, அவற்றின் உடலில் நுண்ணிய கண்காணிப்புக் கருவிகளைப் பொருத்தி விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

ஆரஞ்சு, கறுப்பு நிறங்களைக் கொண்ட இந்த வண்ணத்துப்பூச்சிகள், தெற்கு கனடா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சுமார் 4,800 கிலோமீட்டர் பயணித்து, மத்திய மெக்சிகோவின் காடுகளில் குளிர்காலத்தைக் கழிக்கின்றன.


அவை தினமும் எவ்வளவு தூரம் பறக்கின்றன, எங்கு உணவு தேடுகின்றன, இரவில் எங்கு தங்குகின்றன என்பதைக் கண்டறிவது ஆய்வின் நோக்கமாகும். இந்த ஆண்டில் சுமார் 1,750 வண்ணத்துப்பூச்சிகளுக்குச் சூரிய ஆற்றலில் இயங்கும் ரேடியோ கண்காணிப்புக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
செல்லுலார் டிராக்கிங் டெக்னாலஜீஸ் நிறுவனம் உருவாக்கிய கருவிகள் மிகவும் எடை குறைந்தவை. வண்ணத்துப்பூச்சிகளின் உடலில் கவனமாகப் பொருத்தப்படும் இவை, அருகிலுள்ள பெறும் சாதனங்களுக்குத் தகவல்களை அனுப்புகின்றன.


புளூடூத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் இந்த முயற்சியில் பொதுமக்களும் பங்கேற்கலாம். இலவசமான ‘புராஜெக்ட் மோனார்க் சயின்ஸ்’ செயலி மூலம் வண்ணத்துப்பூச்சிகளின் பயணப் பதிவுகளைப் பார்க்கலாம். அருகிலுள்ள கண்காணிப்புக் கருவிகளின் சமிக்ஞைகளைப் பதிவு செய்து ஆய்வுக்குத் தகவல்களையும் வழங்கலாம்.
கைபேசியின் புளூடூத் மற்றும் இருப்பிடச் சேவைகள் மூலம் அருகில் பறக்கும் வண்ணத்துப்பூச்சிகளின் பதிவுகள் சேகரிக்கப்படுகின்றன. 

இதனால் விஞ்ஞானிகளுடன் தன்னார்வலர்களும் இணைந்து வலசைப் பயணத்தைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பு உருவாகியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு தொடங்கிய கண்காணிப்பில், ராக்கி மலைத்தொடருக்கு மேற்கிலுள்ள யூட்டாவிலிருந்து ஒரு வண்ணத்துப்பூச்சி, மத்திய மெக்சிகோவிலுள்ள கிழக்குப் பகுதி வண்ணத்துப்பூச்சிகளுடன் இணைந்ததற்கான ஆதாரம் கிடைத்துள்ளது. இந்தப் பருவத்தில் கருவி பொருத்தப்பட்ட சுமார் 175 வண்ணத்துப்பூச்சிகள் மெக்சிகோவில் கண்டறியப்பட்டுள்ளன.


இருப்பினும், கருவியின் சமிக்ஞை பதிவான இடமே தெரியவரும்; வண்ணத்துப்பூச்சியின் துல்லியமான இருப்பிடத்தைத் தொடர்ந்து அறிய முடியாது. கருவிகள் அவற்றின் நடத்தையில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றனவா என்பதை மேலும் ஆராய வேண்டும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
வாழிட இழப்பு, பூச்சிக்கொல்லிகள், காலநிலை மாற்றம் ஆகியவற்றால் மோனார்க் இனத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அவற்றின் முக்கியமான உணவு மற்றும் ஓய்விடங்களை அடையாளம் காண்பது, பாதுகாப்பு நடவடிக்கைகளைத் திட்டமிட உதவும் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.


முந்தைய செய்தி
Free mock test coaching for TNPSC
அடுத்த செய்தி
தென்கொரியாவில் இறக்குமதி கார் விற்பனை 29.3% உயர்வு

தொடர்புடைய செய்திகள்