Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

சுந்தரம் ஃபைனான்ஸ் Q2 நிகர லாபம் 6% உயர்வு

சுந்தரம் ஃபைனான்ஸ் Q2 நிகர லாபம் 6% உயர்வு

நிறுவனத்தின் நிகர லாபம் 6 சதவீதம் அதிகரித்து தற்போது ரூ.517 கோடியாக உயர்ந்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

சுந்தரம் ஃபைனான்ஸ் நிறுவனம், கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் தனது நிகர லாபம் 6 சதவீதம் அதிகரித்து ரூ.517 கோடியை எட்டியுள்ளதாக அறிவித்துள்ளது.


சுந்தரம் ஃபைனான்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள 2-வது காலாண்டு நிதிநிலை முடிவுகளின்படி, கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ.488 கோடியாக இருந்த நிறுவனத்தின் நிகர லாபம் 6 சதவீதம் அதிகரித்து தற்போது ரூ.517 கோடியாக உயர்ந்துள்ளது. 


இதேபோல், நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.2,401 கோடியிலிருந்து ரூ.2,749 கோடியாக அதிகரித்துள்ளது. இதில் வட்டி வருவாய் மட்டும் ரூ.2,330 கோடியாகும். மேலும், நிறுவனத்தின் மொத்த செலவினங்கள் ரூ.2,004 கோடியாக உள்ளன. 

இதனிடையே, 'சுந்தரம் ஆல்டர்நேட் அசெட்ஸ்' நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளை ரூ.75 கோடிக்குள் கையகப்படுத்தி, அதை நேரடி துணை நிறுவனமாக மாற்ற நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. மற்றொரு முக்கிய நிகழ்வாக, தலைவர் பதவியிலிருந்து எஸ்.விஜி விலகியதை அடுத்து, புதிய தலைவராக ஆர்.வெங்கட்ராமன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

முந்தைய செய்தி
Damaged bridge on 18th canal affects water supply
அடுத்த செய்தி
ஹால்மார்க் இல்லாத ரூ.3 கோடி தங்க நகைகள் பறிமுதல்

தொடர்புடைய செய்திகள்