Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

அடுத்த 2 ஆண்டுகளில் ரூ.80,000 கோடி முதலீடு - அதானி எண்டர்பிரைசஸ் திட்டம்

அடுத்த 2 ஆண்டுகளில் ரூ.80,000 கோடி முதலீடு - அதானி எண்டர்பிரைசஸ் திட்டம்

இது கடந்த ஆண்டைவிட 56 சதவீதம் அதிகமாகும்.

பகிரவும் WhatsApp Facebook

அதானி குழுமத்தின் முதன்மை நிறுவனமான அதானி என்டர்பிரைசஸ், அடுத்த 2 ஆண்டுகளில் ஆண்டுக்கு ரூ.35,000 கோடி முதல் ரூ.45,000 கோடி வரை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. இதன்படி, மொத்த முதலீடு ரூ.80,000 கோடி வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விமான நிலையங்கள், டேட்டா சென்டர்கள் மற்றும் குஜராத்தின் முண்ட்ராவில் அமைக்கப்படும் பிவிசி உற்பத்தி ஆலை ஆகியவை முக்கிய முதலீட்டுத் துறைகளாக உள்ளன.
நிறுவனம் நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் ரூ.11,958 கோடி செயல்பாட்டு லாபம் ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 56 சதவீதம் அதிகமாகும். ஒருங்கிணைந்த வருவாயும் 62 சதவீதம் உயர்ந்து ரூ.71,569 கோடியாக உள்ளது.


நாட்டின் பயணிகள் விமானப் போக்குவரத்தில் 23 சதவீதத்தைக் கையாளும் 8 விமான நிலையங்களை அதானி குழுமம் நிர்வகிக்கிறது. மேலும், டேட்டா சென்டர் திறனை 500 மெகாவாட்டாக உயர்த்தத் திட்டமிட்டுள்ளது.

 முந்திராவில் ரூ.26,000 கோடியில் அமைக்கப்படும் பிவிசி ஆலையின் 60 சதவீதப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இதன் உற்பத்தி அடுத்த நிதியாண்டில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய செய்தி
உக்ரைன் போருக்கு பேச்சுவார்த்தையே தீர்வு - பிரதமர் மோடி
அடுத்த செய்தி
2 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தொடர்புடைய செய்திகள்