Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

2 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

2 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

இடி, மின்னலுடன் மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசுவதுடன் கனமழை பெய்யக்கூடும்.

பகிரவும் WhatsApp Facebook

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று (நவ.10) ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், 13 மாவட்டங்களில் மிதமான மழையும், பிற மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இன்று (நவ10) ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசுவதுடன் கனமழை பெய்யக்கூடும்.


தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

நாளை (நவ.11) 12 மாவட்டங்களில் மிதமான மழையும், ஏனைய தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் லேசான மழையும் பெய்யக்கூடும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி
அடுத்த 2 ஆண்டுகளில் ரூ.80,000 கோடி முதலீடு - அதானி எண்டர்பிரைசஸ் திட்டம்
அடுத்த செய்தி
தீபாவளி முடிந்தும் ரயில்களில் குறையாத பயணிகள் கூட்டம்

தொடர்புடைய செய்திகள்