Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

தீபாவளி முடிந்தும் ரயில்களில் குறையாத பயணிகள் கூட்டம்

தீபாவளி முடிந்தும் ரயில்களில் குறையாத பயணிகள் கூட்டம்

சுங்கச்சாவடிகளிலும் நீண்ட வரிசையில் இருச்சக்கர வாகனங்கள் கூட காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

பகிரவும் WhatsApp Facebook

தீபாவளி முடிந்தும் வடமாநிலப் பயணிகள் தொடர்ந்து சொந்த ஊருக்குச் செல்வதால் முக்கிய ரயில்நிலையங்களில் நேற்றும் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

தீபாவளிக்காக தமிழகத்தில் இருந்து வட கிழக்கு மாநிலங்களுக்கு 70 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. அதிலும் நவ.5.6 தேதிகளில் இந்தக் கூட்டம் மிக அதிகமாக இருந்ததால் காலையில் அறிவித்து மாலையில் வட கிழக்கு மாநிலங்களுக்கு திடீர் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.


இந்நிலையில் தீபாவளி நேற்று முன்தினம் முடிந்த பிறகும் நேற்று பெரம்பூர், சென்ட்ரல் ரயில்நிலையங்களில் வட மாநிலப் பயணிகள் கூட்டம் குறையவில்லை. காலையில் புறப்பட்ட ரயிலுக்காக நேற்று முன்தினம் இரவு முதலும், நேற்று இரவு புறப்பட்ட ரயிலுக்காக நேற்று காலையில் இருந்தும் இவர்கள் வரிசையில் காத்திருந்தனர்.

 
இது குறித்து பெரம்பூர் ரயில்நிலையத்தில் காத்திருந்தை பீகாரைச் சேர்ந்த கோபால் மாஞ்சி, ‘எங்கள் மாநிலத்தில் தீபாவளி 10 நாட்கள் கொண்டாடுவோம். அதிலும் நவ.13 முதல் நவ.16 வரை கொண்டாடப்பட உள்ள ‘சாத் பண்டிகை’ மிக முக்கியமானது. 

அதனால் தான் ஊருக்குப் போகக் காத்திருக்கிறோம். முன்பதிவு செய்தாலும் காத்திருப்பு பட்டியலில் தான் இடம் கிடைக்கிறது. அதை வைத்து முன்பதிவு பெட்டியிலேயோ அல்லது சாதாரண பெட்டியிலேயோ, கிடைக்கும் இடத்தில் நின்றோ, உட்கார்ந்தோ ஊருக்கு போய் விடுவோம். ஒரு மாதம் ஊரில் இருந்து விட்டுதான் இங்கு வேலை செய்ய வருவேன் ’ என்றார்.

தொடரும் நெரிசல்

தீபாவளி பண்டிகை தினமான நேற்று முன்தினமும், மறுநாளான நேற்றும் சென்னையில் கூட்டத்துக்குக் குறைவில்லை. அவ்வப்போது பெய்த மழைக்கிடையில் துணிக்கடை, பட்டாசுக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. அரசு விடுமுறை இருந்தும் நேற்று பேருந்துகளில், சாலைகளில் கூட்டத்துக்கு குறைவில்லை.


அதுமட்டுமின்றி நவ.5 முதல் நவ.7 வரை தொடர்ந்து 3 நாட்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டவர்கள், நேற்று மாலை முதல் ஒரே நாளில் ஊருக்குத் திரும்புவதால் சென்னை வரும் சாலைகள் நேற்று இரவு முதல் நெரிசலுடன் இணைந்தன. சுங்கச்சாவடிகளிலும் நீண்ட வரிசையில் இருச்சக்கர வாகனங்கள் கூட காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.


சென்னை திரும்பும் பயணிகளுக்காக சிறப்பு ரயில்கள் மட்டுமின்றி நேற்றும், இன்றும் 11 ஆயிரத்துக்கும் அதிகமான பேருந்துகளை தமிழக அரசு அறிவித்திருந்தது. நவ.5, 6, 7 தேதிகளில் சென்னையில் இருந்து 15,649 பேருந்துகள் இயக்கப்பட்டன.

முந்தைய செய்தி
2 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
அடுத்த செய்தி
டேட்டா சென்டர் தலைநகராக உருவெடுக்கும் சென்னை

தொடர்புடைய செய்திகள்