Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

டேட்டா சென்டர் தலைநகராக உருவெடுக்கும் சென்னை

டேட்டா சென்டர் தலைநகராக உருவெடுக்கும் சென்னை

பல்லாயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்ப்பு

பகிரவும் WhatsApp Facebook

வாட்ஸ்அப் முதல் சாட் ஜிபிடி வரை நாம் அன்றாடம் பயன்படுத்தும் டிஜிட்டல் உலகின் முதுகெலும்பாக விளங்கும் டேட்டா சென்டர் துறையில், சென்னை புதிய உச்சத்தை நோக்கிப் பயணித்து வருகிறது. அடுத்த 6 ஆண்டுகளில் இத்துறை சுமார் 7 மடங்கு வளர்ச்சியை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.


நம்முடைய புகைப்படங்கள் முதல் செயற்கை நுண்ணறிவு வழங்கும் தகவல்கள் வரை அனைத்தையும் சேமித்து வைத்து, அதிவேகமாக செயல்படுத்துவதில் டேட்டா சென்டர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இத்தகைய டேட்டா சென்டர் துறையில், இந்தியாவின் முக்கிய மையங்களில் ஒன்றாக சென்னை உருவெடுத்துள்ளது. சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற டேட்டா சென்டர் மாநாட்டில், இத்துறையின் எதிர்கால வளர்ச்சி, குவியும் முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளில் இத்துறை 100 மடங்கு அசுர வளர்ச்சியை எட்டியுள்ளதாக நிபுணர்கள் இம்மாநாட்டில் தெரிவித்தனர்.

தற்போதைய நிலவரப்படி, சென்னையில் 305 மெகாவாட் திறன் கொண்ட டேட்டா சென்டர்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் திறன் 2032-ஆம் ஆண்டிற்குள் 2.2 ஜிகாவாட்டாக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதாவது, அடுத்த சில ஆண்டுகளில் இதன் கட்டமைப்பு சுமார் 7 மடங்கு அதிகரிக்க உள்ளது.

இதுகுறித்து இஷ்ரே டேட்டா சென்டர் அமைப்பின் தலைவர் கிருஷ்ணன் கூறுகையில், "தற்போது சராசரியாக ஒரு நபரின் மொபைல் டேட்டா பயன்பாடு நாளொன்றுக்கு 2 முதல் 3 ஜிபி என்ற அளவில் உள்ளது. ஆனால் 2032-ஆம் ஆண்டில், ஒரு தனி மனிதரின் சராசரி டேட்டா பயன்பாடு நாளொன்றுக்கு 52 ஜிபி ஆக உயரும். மக்களின் இந்த அசுர வேக டேட்டா பயன்பாட்டை ஈடுகட்டவே, டேட்டா சென்டர்களின் துறை மாபெரும் வளர்ச்சியை சந்தித்து வருகிறது" என்றார்.

தகவல் தொழில்நுட்பத் துறையினர் மட்டுமின்றி, மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில் மற்றும் கெமிக்கல் உள்ளிட்ட பல்வேறு பொறியியல் துறைகளைச் சேர்ந்த இளைஞர்களுக்கும், புதிய மற்றும் பல வகையான வேலைவாய்ப்புகள் பெருமளவில் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


  • அடுத்த 6 ஆண்டுகளில் சென்னையின் டேட்டா சென்டர் திறன் 305 MW-லிருந்து 2.2 GW ஆக உயர உள்ளது.
  • 2032-ல் ஒரு தனிநபரின் தினசரி டேட்டா பயன்பாடு 2-3 GB யிலிருந்து 52 GB ஆக அதிகரிக்கும்.
  • மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில், கெமிக்கல் போன்ற பல்வேறு பொறியியல் துறைகளிலும் புதிய வேலைவாய்ப்புகள் குவியும்.


முந்தைய செய்தி
தீபாவளி முடிந்தும் ரயில்களில் குறையாத பயணிகள் கூட்டம்
அடுத்த செய்தி
தீ விபத்து ஏற்பட்டால் கட்டிட உரிமையாளருக்கு சிறை - தீயணைப்பு சட்டத்தில் அதிரடி திருத்தம்

தொடர்புடைய செய்திகள்