Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

உக்ரைன் போருக்கு பேச்சுவார்த்தையே தீர்வு - பிரதமர் மோடி

உக்ரைன் போருக்கு பேச்சுவார்த்தையே தீர்வு - பிரதமர் மோடி

இம்மோதலை பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரத்தின் மூலமே தீர்க்க வேண்டும்

பகிரவும் WhatsApp Facebook

ரஷ்யா-உக்ரைன் போருக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு என உக்ரைன் அதிபரிடம், பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தினார்.

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் உக்ரைன் இணைவதற்கான முயற்சிகளை எடுத்து வந்ததற்கு ரஷ்யா எதிர்ப்புத் தெரிவித்து வந்தது. நேட்டோவில் உக்ரைன் இணைந்தால் தங்களது நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்து என அறிவித்த ரஷ்யா கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டது.


 இதற்கு உக்ரைன் ராணுவமும் பதிலடி கொடுத்து வருவதோடு, நோட்டோ நாடுகளும் உதவி வருகின்றன. இதனால், போர் சுமார் 4 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பிரதமர் மோடியுடன் உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி நேற்று தொலைபேசி மூலமாக உரையாடினார். அப்போது, ரஷ்யாவின் தாக்குதல் குறித்து அவர் கருத்து பகிர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது.


அப்போது, இந்தியாவின் மனிதநேய அணுகுமுறையை மீண்டும் உறுதிப்படுத்திய பிரதமர் மோடி, இம்மோதலை பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரத்தின் மூலமே தீர்க்க வேண்டும் என்பதே இந்தியாவின் நிலையான நிலைப்பாடு. இந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவும், மோதலை முடிவுக்கு கொண்டு வர அமைதியான தீர்வு காண்பதை நோக்கமாகக் கொண்ட அனைத்து முயற்சிகளுக்கும் பங்களிக்க இந்தியா தயாராக இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.


இரு நாட்டு மக்களின் பரஸ்பர நலனுக்காக, பல்வேறு துறைகளில் இந்தியா-உக்ரைன் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் இரு நாட்டுத் தலைவர்களும் விவாதித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் உயர்வு
அடுத்த செய்தி
அடுத்த 2 ஆண்டுகளில் ரூ.80,000 கோடி முதலீடு - அதானி எண்டர்பிரைசஸ் திட்டம்

தொடர்புடைய செய்திகள்