Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் உயர்வு

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் உயர்வு

வெள்ளிக்கிழமை 43 காசுகள் உயர்ந்து ரூ.93.98-ல் முடிந்திருந்தது.

பகிரவும் WhatsApp Facebook

கச்சா எண்ணெய் விலை குறைவு, அந்நிய முதலீடு அதிகரிப்பு ஆகியவற்றால், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று 5 காசுகள் உயர்ந்து, தற்காலிகமாக ரூ.93.93-ல் முடிந்தது.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.93.85-ல் வர்த்தகத்தைத் தொடங்கியது. வர்த்தகத்தின்போது ரூ.93.69 வரை வலுப்பெற்ற ரூபாய், பின்னர் ரூ.94.11 வரை பலவீனமடைந்தது. வெள்ளிக்கிழமை 43 காசுகள் உயர்ந்து ரூ.93.98-ல் முடிந்திருந்தது.


மேற்கு ஆசியாவில் பதற்றம் தணியும் என்ற எதிர்பார்ப்பும் ரூபாய்க்கு ஆதரவாக இருந்தது. இருப்பினும், சந்தை விடுமுறைக்கு முன்னதாக பொதுத்துறை வங்கிகள் டாலர்களை வாங்கியதால், காலையில் ரூபாய் கண்ட உயர்வின் ஒரு பகுதி குறைந்ததாக ஹெச்டிஎஃப்சி செக்யூரிட்டீஸ் ஆய்வாளர் திலீப் பர்மார் தெரிவித்தார். அமெரிக்கப் பணவீக்கத் தரவு செவ்வாய்க்கிழமை வெளியாகவுள்ள நிலையில், சந்தையின் கவனம் அதன் மீது திரும்பியுள்ளது.


ஆறு முக்கிய நாணயங்களுக்கு எதிரான டாலரின் மதிப்பைக் காட்டும் டாலர் குறியீடு 0.45 சதவீதம் குறைந்து 101.83-ல் வர்த்தகமானது. பிரெண்ட் கச்சா எண்ணெய் முன்பேர விலை 0.80 சதவீதம் சரிந்து பீப்பாய்க்கு 97.53 டாலராக இருந்தது.


பங்குச் சந்தைத் தரவுகளின்படி, வெள்ளிக்கிழமை அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.13,749.82 கோடி மதிப்பிலான பங்குகளை நிகர அடிப்படையில் வாங்கினர். இதனிடையே, அக்டோபர் 30-ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2.691 பில்லியன் டாலர் குறைந்து 717.056 பில்லியன் டாலராக இருந்ததாக ரிசர்வ் வங்கி தெரிவித்தது.

முந்தைய செய்தி
இந்திய பங்குகளுக்கு அதிக முக்கியத்துவம் - சீன சந்தையின் பரிந்துரை குறைப்பு
அடுத்த செய்தி
உக்ரைன் போருக்கு பேச்சுவார்த்தையே தீர்வு - பிரதமர் மோடி

தொடர்புடைய செய்திகள்