Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

500 நாள் டெபாசிட்டுக்கு 7.5% வரை வட்டி: பேங்க் ஆஃப் இந்தியா அறிவிப்பு

500 நாள் டெபாசிட்டுக்கு 7.5% வரை வட்டி: பேங்க் ஆஃப் இந்தியா அறிவிப்பு

புதிய வட்டி விகிதங்கள் நவம்பர் 2, 2026 முதல் அமலுக்கு வந்துள்ளன. ரூ.3 கோடிக்குக் குறைவான வைப்புத் தொகைகளுக்கு ஓராண்டு காலத்துக்கு 6.6 சதவீதமும், ஓராண்டுக்கு மேல் மூன்று ஆண்டுகளுக்குக் குறைவான காலத்துக்கு 6.7 சதவீதமும் வட்டி வழங்கப்படும்.

பகிரவும் WhatsApp Facebook

பேங்க் ஆஃப் இந்தியா வங்கி, 500 நாள் சிறப்பு நிரந்தர வைப்பு திட்டத்தில் (FD) மிக மூத்த குடிமக்களுக்கு 7.5 சதவீதம் வரை வட்டி வழங்குவதாக அறிவித்துள்ளது. மேலும், குறிப்பிட்ட கால அளவிலான வைப்புத் தொகைகளுக்கான வட்டி விகிதங்களையும் உயர்த்தியுள்ளது.


'ஸ்டார் அக்ஷய் ஃபிக்ஸ்டு டெபாசிட்' திட்டத்தில் பொது வாடிக்கையாளர்களுக்கு ஆண்டுக்கு 6.85 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 7.35 சதவீதமும், மிக மூத்த குடிமக்களுக்கு 7.5 சதவீதமும் வட்டி வழங்கப்படும்.

புதிய வட்டி விகிதங்கள் நவம்பர் 2, 2026 முதல் அமலுக்கு வந்துள்ளன. ரூ.3 கோடிக்குக் குறைவான வைப்புத் தொகைகளுக்கு ஓராண்டு காலத்துக்கு 6.6 சதவீதமும், ஓராண்டுக்கு மேல் மூன்று ஆண்டுகளுக்குக் குறைவான காலத்துக்கு 6.7 சதவீதமும் வட்டி வழங்கப்படும். ரூ.3 கோடி முதல் ரூ.10 கோடிக்கும் குறைவான வைப்புகளுக்கும் குறிப்பிட்ட கால அளவுகளில் புதிய வட்டி விகிதங்கள் பொருந்தும் என பேங்க் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி
டெட் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு: பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை
அடுத்த செய்தி
Erode district records over 6000 cataract surgeries

தொடர்புடைய செய்திகள்