Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

டெட் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு: பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை

டெட் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு: பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை

தகுதியுள்ள ஆசிரியர்களின் பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கான நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித் துறை மேற்கொண்டுள்ளது.


உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, ஆசிரியர்களுக்குப் பதவி உயர்வு வழங்குவதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால், டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களைக் கொண்டு பதவி உயர்வுக்கான பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது.

இதன்படி, தகுதியுள்ள ஆசிரியர்களின் பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான பணிகளை கல்வித் துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, பணியில் உள்ள ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு உதவும் வகையில் சிறப்புப் பயிற்சி வகுப்புகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 


மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் ஏழு வார இறுதி நாட்களில் இந்தப் பயிற்சிகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சி வகுப்புகள் மூலம் ஆசிரியர்கள் தேர்வுக்குத் தயாராகும் வாய்ப்பைப் பெறுவார்கள்.

முந்தைய செய்தி
VBJ unveils its biggest showroom in Tamil Nadu
அடுத்த செய்தி
500 நாள் டெபாசிட்டுக்கு 7.5% வரை வட்டி: பேங்க் ஆஃப் இந்தியா அறிவிப்பு

தொடர்புடைய செய்திகள்