Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

வணிகப் புத்தக விருதுப் பட்டியல் வெளியானது

வணிகப் புத்தக விருதுப் பட்டியல் வெளியானது

கடந்த ஆண்டு இந்த விருதை கார்த்திக் முரளிதரன் எழுதிய 'Accelerating India's Development' நூல் வென்றது குறிப்பிடத்தக்கது.

பகிரவும் WhatsApp Facebook

2026-ம் ஆண்டுக்கான 'கஜா கேபிடல் பிசினஸ் புக் பிரைஸ்' விருதுக்கான இறுதிப் பட்டியலில் ஐந்து புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. ஜொமாட்டோ, ஃப்ரெஷ்வொர்க்ஸ் நிறுவனங்களின் உருவாக்கம், இந்தியத் தொலைத்தொடர்புத் துறையின் போட்டி, பங்குச்சந்தை வரலாறு எனப் பல்வேறு தலைப்புகள் இந்தப் பட்டியலில் கவனம் பெற்றுள்ளன.

ஃப்ரெஷ்வொர்க்ஸ் நிறுவனர் கிரிஷ் மாத்ருபூதத்தின் 'All In', ஜொமாட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயலின் பயணத்தை விவரிக்கும் மேகா விஸ்வநாத்தின் 'Unseen' ஆகியவை முக்கிய இடம்பிடித்துள்ளன.

மேலும், இந்தியத் தொலைத்தொடர்புத் துறையின் மூன்று தசாப்த காலப் போட்டியைப் பேசும் 'Telecom Wars', ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் இந்தியச் செயல்பாடுகளை ஆராயும் 'The Johnson & Johnson Files', இந்தியப் பங்குச்சந்தையின் வரலாற்றை விவரிக்கும் 'Running Behind Lakshmi' ஆகிய நூல்களும் தேர்வாகியுள்ளன.

வெற்றியாளர் அடுத்த மாதம் அறிவிக்கப்பட உள்ளார். அவருக்கு ரூ.20 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும். கடந்த ஆண்டு இந்த விருதை கார்த்திக் முரளிதரன் எழுதிய 'Accelerating India's Development' நூல் வென்றது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி
விவசாய மின் இணைப்புப் பணிகளை விரைவுபடுத்த உத்தரவு
அடுத்த செய்தி
பயணிகளிடம் மரியாதையுடன் நடக்க வேண்டும்: போக்குவரத்து அமைச்சர் அறிவுறுத்தல்

தொடர்புடைய செய்திகள்