Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

விவசாய மின் இணைப்புப் பணிகளை விரைவுபடுத்த உத்தரவு

விவசாய மின் இணைப்புப் பணிகளை விரைவுபடுத்த உத்தரவு

விவசாய மின் இணைப்புக்கு விண்ணப்பித்தவர்களில் எந்தெந்த பிரிவினருக்கு முதலில் இணைப்புகள் வழங்க வேண்டும் என்பது தொடர்பாகவும் விரிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

பகிரவும் WhatsApp Facebook

தமிழ்நாட்டில் நடப்பாண்டில் 50,000 விவசாய மின் இணைப்புகள் வழங்க வட்டார வாரியாக இலக்குகளை நிர்ணயித்து மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் நடப்பாண்டில் 50 ஆயிரம் விவசாய மின் இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதற்கான நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. இந்த நிலையில், 2026–27-ம் நிதியாண்டில் திட்டமிட்டபடி 50,000 விவசாய மின் இணைப்புகளை வழங்குவதற்காக, வட்டார வாரியாக இலக்குகளை நிர்ணயித்து அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்கள் மற்றும் மின் பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர்களுக்கு தமிழ்நாடு மின்சார வாரிய இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

அதனடிப்படையில் நடப்பாண்டில் ஏற்கெனவே மின் இணைப்பு வழங்குவதற்குத் தயார் நிலையில் உள்ள 48,944 விண்ணப்பங்கள் மற்றும் புதிதாக விண்ணப்பித்துள்ள 1,056 விண்ணப்பங்கள் என மொத்தம் 50,000 விவசாய மின் இணைப்புகளை வழங்க வட்டார வாரியாக மின் இணைப்புகள் வழங்குவதற்கான இலக்குகளை நிர்ணயித்து அதனடிப்படையில் விரைவாக மேற்கொள்ள வேண்டும் மின்வாரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

விவசாய மின் இணைப்புக்கு விண்ணப்பித்தவர்களில் எந்தெந்த பிரிவினருக்கு முதலில் இணைப்புகள் வழங்க வேண்டும் என்பது தொடர்பாகவும் விரிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, அரசு நிதி ஒதுக்கும் திட்டங்களின் கீழ் வழங்கப்படும் விவசாய மின் இணைப்புகளுக்கு அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி
Highway Infrastructure wins contract worth ₹198.31 cr
அடுத்த செய்தி
வணிகப் புத்தக விருதுப் பட்டியல் வெளியானது

தொடர்புடைய செய்திகள்