Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

பயணிகளிடம் மரியாதையுடன் நடக்க வேண்டும்: போக்குவரத்து அமைச்சர் அறிவுறுத்தல்

பயணிகளிடம் மரியாதையுடன் நடக்க வேண்டும்: போக்குவரத்து அமைச்சர் அறிவுறுத்தல்

பெண்கள், மூத்த குடிமக்கள், மாணவர்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோரிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்.

பகிரவும் WhatsApp Facebook

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பணிபுரியும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள், பயணிகளிடம் மரியாதையுடனும், பொறுமையுடனும், கனிவுடனும் நடந்து கொள்ள வேண்டும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், பேருந்து இயக்கத்தின்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு அமைச்சர் அறிவுரைகளை வழங்கினார்.

நிர்ணயிக்கப்பட்ட பேருந்து நிறுத்தங்களில் மட்டுமே பேருந்துகளை நிறுத்தி, பயணிகளைப் பாதுகாப்பாக ஏற்றிச் செல்லவும், இறக்கிவிடவும் வேண்டும். பயணிகளை ஏற்ற மறுப்பது, பாதி வழியில் இறக்கிவிடுவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. பேருந்துகளைத் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும்.
பெண்கள், மூத்த குடிமக்கள், மாணவர்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோரிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். ஓட்டுநர், நடத்துநர்கள் மீதான புகார்கள் உரிய முறையில் விசாரிக்கப்பட்டு, குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால் சேவை விதிகளின்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

பேருந்து இயக்கம் மற்றும் பணியாளர்களின் செயல்பாடுகளை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். பணியாளர்களுக்கு அவ்வப்போது பயிற்சி மற்றும் மனநல ஆலோசனைகள் வழங்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

தொடர்ந்து, பணியின்போது உயிரிழந்த ஊழியரின் வாரிசுதாரர் சக்திப்ரியாவுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையை அமைச்சர் வழங்கினார். கூட்டத்தில் போக்குவரத்துத் துறைச் செயலர் நிர்மல்ராஜ், மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஜெயசீலன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


முந்தைய செய்தி
வணிகப் புத்தக விருதுப் பட்டியல் வெளியானது
அடுத்த செய்தி
தீபாவளி உற்சாகத்தில் பங்குச்சந்தை; சென்செக்ஸ் 384 புள்ளிகள் உயர்வு

தொடர்புடைய செய்திகள்