Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

தங்கம் விலை மேலும் சரிய வாய்ப்பு - கோடக் ஏஎம்சி கணிப்பு

தங்கம் விலை மேலும் சரிய வாய்ப்பு - கோடக் ஏஎம்சி கணிப்பு

அமெரிக்க டாலர் மதிப்பில் தங்கத்தின் விலை சுமார் 3 சதவீதம் சரிந்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்வதற்கு ஏற்றதாக இருந்தாலும், தங்கத்தின் விலை குறுகிய காலத்தில் மேலும் சரிய வாய்ப்புள்ளது. இதனை பயன்படுத்தி, படிப்படியாக முதலீடு செய்வது நல்லது என கோடக் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் நிதி மேலாளர் சதீஷ் தொண்டபதி தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு வாரத்தில் அமெரிக்க டாலர் மதிப்பில் தங்கத்தின் விலை சுமார் 3 சதவீதம் சரிந்துள்ளது. ஏறக்குறைய ஓராண்டில் இல்லாத அளவுக்கு விலை குறைந்துள்ளது. அமெரிக்கப் பத்திரங்களின் வருவாய் விகிதம் குறைவதும், டாலரின் மதிப்பு பலவீனமடைவதும் பொதுவாக தங்கத்தின் விலை உயர்வுக்கு ஆதரவாக இருக்கும்.

 
ஆனால் அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களைக் குறைப்பதில் கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதும், நீண்ட காலத்துக்கு வட்டி விகிதங்கள் உயர்ந்த நிலையிலேயே நீடிக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் தங்கத்தின் விலை உயர்வைத் தடுக்கின்றன. இதற்கிடையே, ஈரான் போர் காரணமாக உலகளாவிய எரிசக்தி சந்தையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வாக இருப்பதால் பணவீக்கம் அதிகரிக்கும் என்ற அச்சமும் நிலவுகிறது.

போர் பதற்றம் ...

பொதுவாக போர், அரசியல் பதற்றம், பணவீக்கம் போன்ற நிச்சயமற்ற சூழல்களில் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாகத் தங்கத்தைத் தேர்வு செய்வார்கள்.ஆனால் தற்போதைய சூழலில் முதலீட்டாளர்களின் கவனம் அமெரிக்க பெடரல் ரிசர்வின் வட்டி விகிதம் மீதே உள்ளது. இதனால் போர் பதற்றம் இருந்தபோதிலும் தங்கத்தின் விலை உயரவில்லை.இருப்பினும், தற்போதைய விலைச் சரிவு தங்கத்தின் நீண்டகால முதலீட்டு வாய்ப்புகளைப் பாதிக்காது. ஏனெனில் அதிக வட்டி விகிதங்களை நீண்ட காலத்துக்கு தொடர்ந்து வைத்திருப்பது சாத்தியமில்லாமல் போகலாம்.


குறுகிய காலத்தில் தங்கத்தின் விலை மேலும் குறையலாம் அல்லது ஏற்ற இறக்கத்துடன் காணப்படலாம்.எனவே, தற்போதைய விலையில் மொத்தமாக ஒரே நேரத்தில் முதலீடு செய்யாமல், விலை குறையும்போது சிறிது சிறிதாக முதலீடு செய்யலாம்.நீண்டகால அடிப்படையில், உலகளாவிய நிச்சயமற்ற சூழல்களுக்கு எதிரான பாதுகாப்பான முதலீடாக தங்கத்தைத் தொடர்ந்து முதலீட்டை தொடரலாம்.

முந்தைய செய்தி
ஃபோர்ப்ஸ் பட்டியலில் அம்பானி முதலிடம்
அடுத்த செய்தி
டாடா குழும கருத்து வேறுபாடுகளுக்கு சுமுகத் தீர்வு

தொடர்புடைய செய்திகள்