Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஃபோர்ப்ஸ் பட்டியலில் அம்பானி முதலிடம்

ஃபோர்ப்ஸ் பட்டியலில் அம்பானி முதலிடம்

அதிக சொத்து உயர்வைப் பெற்ற கோடீஸ்வரர்கள் பட்டியலில் அம்பானி முதலிடம் பிடித்துள்ளார்.

பகிரவும் WhatsApp Facebook

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் உயர்ந்ததால், அதன் தலைவர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ஒரே நாளில் சுமார் ரூ.59,850 கோடி அதிகரித்துள்ளது. இதன்மூலம், உலக அளவில் அதிக சொத்து உயர்வைப் பெற்ற கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் முதலிடம் பிடித்துள்ளார்.

உலகப் பணக்காரர்கள் பட்டியல் உள்ளிட்ட வணிகம், முதலீடு மற்றும் பொருளாதாரம் சார்ந்த தகவல்களை வெளியிடும் அமெரிக்க வணிக இதழான ஃபோர்ப்ஸ் நேற்று வெளியிட்ட பட்டியலின்படி, அம்பானியின் சொத்து மதிப்பு 7.85 சதவீதம் உயர்ந்து, சுமார் ரூ.8.44 லட்சம் கோடியை எட்டியுள்ளது. உலகப் பணக்காரர்கள் வரிசையில் 23-வது இடத்திலுள்ள அவர், இந்தியாவின் முதல்நிலைப் பணக்காரராகத் தொடர்கிறார். சுமார் ரூ.7.52 லட்சம் கோடி சொத்துடன் கௌதம் அதானி உலகளவில் 26-வது இடத்தில் உள்ளார்.


ரிலையன்ஸின் செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் 40.6 சதவீதம் அதிகரித்து ரூ.25,548 கோடியானது. எதிர்பார்ப்பைவிட சிறப்பான முடிவுகளையடுத்து, நேற்று ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகள் 11.6 சதவீதம் உயர்ந்தன. ஆறு ஆண்டுகளில் பதிவான மிகப்பெரிய ஒருநாள் உயர்வு இதுவாகும்.


சுத்திகரிப்பு, பெட்ரோ ரசாயனத் தொழில்களின் லாப வரம்பு அதிகரிப்பும், ஜியோவின் மேம்பட்ட செயல்பாடும் லாப வளர்ச்சிக்கு உதவின. சில்லறை வர்த்தகப் பிரிவின் லாபத்தில் அழுத்தம் நீடித்தது.


சொத்து உயர்வில் ஸ்பெயினின் அமான்சியோ ஒர்டேகா சுமார் ரூ.16,150 கோடியுடன் இரண்டாமிடத்திலும், சீனாவின் ஜாங் ஷான்ஷான் ரூ.14,250 கோடியுடன் மூன்றாமிடத்திலும் இருந்தனர்.


ரிலையன்ஸின் சுத்திகரிப்புப் பிரிவு அடிப்படை வருவாய் 68 சதவீதமும், ஜியோ பிளாட்ஃபார்ம்ஸின் அடிப்படை வருவாய் 16.6 சதவீதமும் உயர்ந்தன. இந்த வளர்ச்சி முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தியது.


நேற்றைய வர்த்தகத்தில் நிஃப்டி 50 குறியீட்டில் அதிகம் உயர்ந்த பங்காக ரிலையன்ஸ் திகழ்ந்தது. வர்த்தக முடிவில் அதிகபட்ச விலையிலேயே நிறைவடைந்தது.

முந்தைய செய்தி
Erode district records over 6000 cataract surgeries
அடுத்த செய்தி
தங்கம் விலை மேலும் சரிய வாய்ப்பு - கோடக் ஏஎம்சி கணிப்பு

தொடர்புடைய செய்திகள்