Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

அரிய வகை கனிமங்கள் பதப்படுத்தும் ஆலை - ரூ.2,814 கோடி முதலீடு

அரிய வகை கனிமங்கள் பதப்படுத்தும் ஆலை - ரூ.2,814 கோடி முதலீடு

அரிய வகை கனிமங்களை பதப்படுத்துவதற்கான உள்நாட்டு கட்டமைப்பை உருவாக்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

பகிரவும் WhatsApp Facebook

இந்தியாவில் அரிய வகை கனிமங்களை பதப்படுத்தும் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், ரூ.2,814 கோடி முதலீட்டில் புதிய திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், முக்கிய கனிமங்கள் பதப்படுத்தும் தொழிலை ஊக்குவிக்கும் மூலதன ஆதரவுத் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. லித்தியம், நிக்கல், கோபால்ட் உள்ளிட்ட அரிய வகை கனிமங்களை பதப்படுத்துவதற்கான உள்நாட்டு கட்டமைப்பை உருவாக்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.


தற்போது இத்தகைய அரிய வகை கனிமங்கள், மூலப்பொருட்களுக்கு இந்தியா இறக்குமதியை பெரிதும் சார்ந்துள்ளது. இதைக் குறைத்து உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.


நடப்பு நிதியாண்டு முதல் 2030-31 வரையிலான ஐந்து ஆண்டுகளுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்படும். இதன்படி, தகுதியான முதலீட்டில் 30 சதவீதம் வரை மூலதன மானியம் வழங்கப்படும். குறைந்தபட்சம் 30 ஆயிரம் டன் உற்பத்தித் திறன் கொண்ட இரண்டு லித்தியம் பதப்படுத்தும் ஆலைகளும், 50 ஆயிரம் டன் திறன் கொண்ட இரண்டு நிக்கல் பதப்படுத்தும் ஆலைகளும் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒரு லித்தியம் ஆலைக்கு அதிகபட்சமாக ரூ.500 கோடியும், நிக்கல் ஆலைக்கு ரூ.900 கோடியும் மானியமாக வழங்கப்படும். தொழில்நுட்பத் தகுதி மற்றும் நிதி ஏலத்தின் அடிப்படையில் நிறுவனங்கள் தேர்வு செய்யப்படும். மானியத் தொகை நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை எட்டுவதற்கு ஏற்ப மூன்று தவணைகளில் வழங்கப்படும்.

இந்த திட்டம் மூலம் மின்சார வாகனங்கள், பேட்டரி மின்சார சேமிப்பு அமைப்புகள் (BESS), எலெக்ட்ரானிக்ஸ், பாதுகாப்புத் துறை, சிறப்பு எஃகு உற்பத்தி உள்ளிட்ட துறைகளுக்குத் தேவையான மூலப்பொருட்களின் உள்நாட்டு விநியோகம் வலுப்பெறும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி
Indian shipping vessels free to navigate Strait of Hormuz: Iran
அடுத்த செய்தி
நெருங்கும் தீபாவளி பண்டிகை; ரூ.12 கோடிக்கு ஆடு, மாடு ஏலம்

தொடர்புடைய செய்திகள்