Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

நெருங்கும் தீபாவளி பண்டிகை; ரூ.12 கோடிக்கு ஆடு, மாடு ஏலம்

நெருங்கும் தீபாவளி பண்டிகை; ரூ.12 கோடிக்கு ஆடு, மாடு ஏலம்
பொள்ளாச்சி சந்தையில் விற்பனைக்காகக் கொண்டு வரப்பட்டிருந்த கால்நடைகள்.

வளர்ப்புக்காக கொண்டு வந்த சிறிய கன்றுக்குட்டிகள் ரூ.2500க்கு விற்பனையானது. இதே போல திடகாத்திரமான காளைகள் ரூ.90 ஆயிரம் வரை விற்றன.

பகிரவும் WhatsApp Facebook

பொள்ளாச்சியில் பிரசித்தி பெற்ற மாட்டுச் சந்தை வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் சந்தை கூடுகிறது. சந்தைக்கு கோவை மாவட்டம் மட்டுமின்றி தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் தங்களது பசு மற்றும் எருமை மாடுகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.

நேற்று முன்தினம் நடைபெற்ற ஏலத்தில் தமிழகம் மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த வியாபாரிகள் பங்கேற்று கால்நடைகளை ஏலம் எடுத்தனர். தினமும் 20 லிட்டர் வரை பால் கொடுக்க கூடிய பசு மாடு ரூ.70 ஆயிரம் முதல் ரூ.90 ஆயிரம் வரையும், எருமை மாடுகள் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை விலை போனது. 

வளர்ப்புக்காக கொண்டு வந்த சிறிய கன்றுக்குட்டிகள் ரூ.2500க்கு விற்பனையானது. இதே போல திடகாத்திரமான காளைகள் ரூ.90 ஆயிரம் வரை விற்றன. இறைச்சிக்காக கொண்டு வரப்பட்ட போத்துகள் (எருமைகள்) ரூ.25 ஆயிரம் வரையும், சினையாகாத மாடுகளும், வயதான மாடுகளும் எடைக்கு தகுந்தாற் போல விலை போனது. 

சந்தைக்கு கொண்டு வரப்பட்ட 2500 மாடுகளில் 98 சதவீத மாடுகள் விற்பனையாகின. 300 விவசாயிகளும், 100 கேரள வியாபாரிகளும் ஏலத்தில் பங்கேற்றனர். இறைச்சிக்காகவும், வளர்ப்பதற்காகவும் கேரள வியாபாரிகள் அதிகளவில் மாடுகளை வாங்கி சென்றதால் ஒரே நாளில் ரூ.10 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது. ரேக்ளா வண்டியில் பூட்டப்படும் குட்டை ரக காளைக் கன்றுகள் ஜோடி ரூ.1.20 லட்சம் முதல் ரூ.1.50 லட்சம் வரை விற்பனையானது.

திருப்பத்தூரில் ரூ.1.80 கோடி ஆடு வர்த்தகம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்டம் மட்றப்பள்ளியில் ரூ.1 கோடிக்கும், நாட்றம்பள்ளியில் ரூ.80 லட்சத்துக்கும் சந்தையில் ஆடுகள் விற்பனையானது.
மட்றப்பள்ளியில் அதிகாலை முதலே நடைபெற்ற சந்தையில் வியாபாரிகள் ஏராளமானோர் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர். 

நாட்றம்பள்ளியில் நடைபெற்ற வாராந்திர ஆட்டுச் சந்தையில் திருப்பத்தூர், வேலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள் தங்களது ஆடுகள் மற்றும் கோழிகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். இந்த சந்தையில் வழக்கத்தை விட அதிக அளவில் வியாபாரிகள் குவிந்து ஏலம் எடுத்தனர்.

முந்தைய செய்தி
அரிய வகை கனிமங்கள் பதப்படுத்தும் ஆலை - ரூ.2,814 கோடி முதலீடு
அடுத்த செய்தி
India has 1,782 BRICS export opportunities

தொடர்புடைய செய்திகள்