Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

திருமண நகைகளுக்கு தேவை உயரும் - தந்தேரஸ் விற்பனை தந்த உற்சாகம்!

திருமண நகைகளுக்கு தேவை உயரும் - தந்தேரஸ் விற்பனை தந்த உற்சாகம்!

பண்டிகையின்போது காணப்பட்ட வாங்கும் ஆர்வம் திருமணக் காலத்திலும் தொடரும்.

பகிரவும் WhatsApp Facebook

தந்தேரஸ் பண்டிகை விற்பனை கடந்த ஆண்டின் அளவை நெருங்கியதைத் தொடர்ந்து, வரவிருக்கும் திருமணக் காலத்தில் நகைகளுக்கான தேவை வலுவாக இருக்கும் என ரத்தினம் மற்றும் நகை கவுன்சில் (ஜிஜேசி) எதிர்பார்க்கிறது.

இதுகுறித்து கவுன்சிலின் துணைத் தலைவர் அவினாஷ் குப்தா கூறியதாவது: சவாலான காலகட்டத்துக்குப் பிறகு நகைகளுக்கான தேவை மேம்பட்டுள்ளது. தந்தேரஸ் விற்பனை ஏறக்குறைய கடந்த ஆண்டுக்கு இணையாக இருந்தது. இது நகை வியாபாரிகளுக்கு உற்சாகம் அளித்துள்ளது.


பண்டிகையின்போது குறைந்த விலையிலான பொருட்களை வாங்குவதில் வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டினர். எனினும், நாணயங்களைவிட நகைகள் அதிகம் விற்பனையாகின. தங்கத்தின் விலை உயர்ந்திருந்ததால், வாடிக்கையாளர்கள் எடை குறைந்த நகைகளை விரும்பி வாங்கினர்.


வெள்ளியின் விலை குறைந்திருந்தது வாடிக்கையாளர்களை ஈர்த்ததால், வெள்ளி நகைகளுக்கும் பிற வெள்ளிப் பொருட்களுக்கும் நல்ல தேவை இருந்தது. பண்டிகை விற்பனையில் நகைகளுக்குக் கிடைத்த வரவேற்பு, திருமணக் கால விற்பனை குறித்த நம்பிக்கையை அதிகரித்துள்ளது.


வாடிக்கையாளர்கள் மீண்டும் நகை வாங்கத் தொடங்கியுள்ள நிலையில், திருமண நகைகளுக்கான தேவை வலுவாக இருக்கும். தந்தேரஸ் விற்பனையில் அதற்கான அறிகுறிகள் தென்பட்டன. பண்டிகையின்போது காணப்பட்ட வாங்கும் ஆர்வம் திருமணக் காலத்திலும் தொடரும்.


சர்வதேச அளவிலும், அரசியல் சூழலிலும் நிலவும் நிச்சயமற்ற தன்மை தணிவது, வரும் மாதங்களில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை மேம்படுத்தி, நகை வாங்கும் ஆர்வத்தை மேலும் அதிகரிக்க உதவும். இவ்வாறு குப்தா தெரிவித்தார்.

முந்தைய செய்தி
குவிந்த சுற்றுலாப் பயணிகள் - தவழ்ந்து சென்ற மேகக்கூட்டம்
அடுத்த செய்தி
தவெக ஆட்சியில் 467 தொழிற்சாலைகள் மூடல் - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

தொடர்புடைய செய்திகள்