Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

தவெக ஆட்சியில் 467 தொழிற்சாலைகள் மூடல் - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

தவெக ஆட்சியில் 467 தொழிற்சாலைகள் மூடல் - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

ஏற்கெனவே செயல்பட்டுவந்த தொழிற்சாலைகளை மூடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

பகிரவும் WhatsApp Facebook

தவெக ஆட்சியில் 467 தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.


திருப்பூர் மாவட்டம், குன்னத்தூரில் புதிய பெட்ரோல் பங்கைத் திறந்து வைத்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் ரூ.1,658 கோடி மதிப்பில் அதிமுக ஆட்சியில் அத்திக்கடவு-அவிநாசி திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், தற்போதைய அரசு தடுப்பணைகளின் எண்ணிக்கையைக் குறைத்ததுடன், திட்டத்தின் செயல்பாட்டுக் காலத்தையும் குறைத்துள்ளது. 


இதனால் திட்டத்தின் முழுப் பலனைப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தவெக அரசு புதிய திட்டங்களையும் தொழிற்சாலைகளையும் உருவாக்குவதற்குப் பதிலாக, ஏற்கெனவே செயல்பட்டுவந்த தொழிற்சாலைகளை மூடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

இந்த ஆட்சியில் 467 தொழிற்சாலைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு மூடப்பட்டுள்ளன. இதனால் சுமார் ஒன்றரை லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். பல நூறு கோடி ரூபாய் முதலீடு செய்து தொழிற்சாலைகளைத் தொடங்குகின்றனர். அவற்றில் சிறிய குறைபாடுகள் இருந்தால், அவற்றை சரிசெய்ய உரிய வாய்ப்பளிக்க வேண்டும்.

 முறையான ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்ட பிறகு சிறிய தவறுகள் இருந்தால்கூட உடனடியாகத் தொழிற்சாலைகளை மூடுகின்றனர். தொழில் நிறுவனங்களுக்கு தேவையற்ற இடையூறுகள் ஏற்படுத்தப்படுவதால், புதிய முதலீடுகள் தமிழகத்துக்கு வருவதற்குப் பதிலாக அண்டை மாநிலங்களுக்குச் செல்கின்றன.

ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.20-க்கு வாங்கியதில் தவறு இருப்பதாகக் கூறுபவர்கள், ரூ.41.50-க்கு கொள்முதல் செய்திருப்பதில் எத்தகைய முறைகேடு நடந்திருக்கிறது என்பதை விளக்க வேண்டும். இதில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது.

ஒரே நாளில் 8 கொலைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இந்த ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் நூற்றுக்கணக்கான கொலைச் சம்பவங்கள் நடந்துள்ளன. இதற்கு போதைப்பொருள் விற்பனையும், பயன்பாடும் அதிகரித்திருப்பது முக்கியக் காரணமாக உள்ளது. இவ்வாறு பழனிசாமி தெரிவி்த்தார்.

கோவை பெரியார் அறிவுலகம் தொடர்பான விவகாரம் குறித்து அவர் கூறுகையில், ''இந்த விவகாரத்தில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தினால்தான் உண்மை வெளிவரும்" என கூறினார்.

முந்தைய செய்தி
திருமண நகைகளுக்கு தேவை உயரும் - தந்தேரஸ் விற்பனை தந்த உற்சாகம்!
அடுத்த செய்தி
பெரியார் அறிவுலகில் போலி நூல்கள் - தேச விரோத செயலாக கருத வலியுறுத்தல்

தொடர்புடைய செய்திகள்