Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

பெரியார் அறிவுலகில் போலி நூல்கள் - தேச விரோத செயலாக கருத வலியுறுத்தல்

பெரியார் அறிவுலகில் போலி நூல்கள் - தேச விரோத செயலாக கருத வலியுறுத்தல்

இந்த முறைகேட்டை விசாரிப்பதற்காக சென்னை உயர் நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் விசாரணை ஆணையம் உடனடியாக அமைக்கப்பட வேண்டும்.

பகிரவும் WhatsApp Facebook

கோவை பெரியார் அறிவுலகத்தில் போலி நூல்கள் இடம்பெற்றதை தேச விரோத செயலாக கருதி, உயர் நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன், ஆய்வாளர்கள் எஸ்.வி.ராஜதுரை, ஆர்.பாலகிருஷ்ணன், முன்னாள் துணைவேந்தர் ஜவகர் நேசன் உள்ளிட்டோர் கூட்டறிக்கை விடுத்துள்ளனர்.

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: நூலகத் துறையில் நடைபெற்றுள்ள இந்த முறைகேட்டை வழக்கமான நிதிசார் கையாடல் என குறுக்கி விடாமல், தமிழ்ச் சமூகத்தின் அறிவுச் செயல்பாட்டை முடக்கும் தேச விரோதச் செயலாக கருதி தண்டிக்க வேண்டும். இந்த முறைகேட்டை விசாரிப்பதற்காக சென்னை உயர் நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் விசாரணை ஆணையம் உடனடியாக அமைக்கப்பட வேண்டும்.


அகல் விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகங்கள் வெளியிட்டுள்ள போலியான நூல்களை கோவை பெரியார் அறிவுலகத்திற்குப் பரிந்துரை செய்தவர்கள், தேர்வு செய்தவர்கள், தொகை விடுவித்தவர்கள் பற்றிய விவரங்களை பொதுவெளியில் வெளியிடுவதுடன், அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இந்த மோசடி செயல்படுத்தப்பட்ட காலக்கட்டம் பற்றிய உண்மைத் தகவலை வெளியிட வேண்டும். போலியான நூல்களை வெளியிட்ட வேறு பதிப்பகங்கள் இருப்பின் அவற்றின் மீதும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசிடமிருந்து மோசடியாகப் பெற்றுள்ள தொகை உரிய வகையில் திரும்பப்பெறப்பட வேண்டும்.


இந்தப் பதிப்பகங்களின் போலிநூல்கள் அனைத்தும் கண்டறியப்பட்டு நூலகங்களிலிருந்து அகற்றுவதுடன் அவற்றை மேற்கொண்டு எங்கும் விற்றுவிடாத வகையில் பறிமுதல் செய்ய வேண்டும். 

மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து நூலகங்களையும் குறிப்பிட்ட காலவரம்புக்குள் ஆய்வு செய்து அறிக்கை தரும் வகையில் நடுநிலையான வல்லுநர் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். வெளிப்படையான நூல்கள் கொள்முதல் கொள்கை வலுப்படுத்தப்பட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

முந்தைய செய்தி
தவெக ஆட்சியில் 467 தொழிற்சாலைகள் மூடல் - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
அடுத்த செய்தி
வா டெக் வாபாக் பங்குக்கு ரூ.2,660 இலக்கு

தொடர்புடைய செய்திகள்