Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

வா டெக் வாபாக் பங்குக்கு ரூ.2,660 இலக்கு

வா டெக் வாபாக் பங்குக்கு ரூ.2,660 இலக்கு

எபிட்டா லாப விகிதம் 2028–29ல் 14 சதவீதமாக உயரும் என மதிப்பிட்டு, பங்குக்கு ரூ.2,360 இலக்கு நிர்ணயித்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

ரூ.20,210 கோடி மதிப்பிலான ஆர்டர்கள் கைவசம் உள்ள நிலையில், வா டெக் வாபாக் நிறுவனத்தின் வளர்ச்சி வாய்ப்புகள் சாதகமாக இருப்பதாக மூன்று தரகு நிறுவனங்கள் மதிப்பிட்டுள்ளன.

நிறுவனத்தின் கைவசமுள்ள ஆர்டர்களின் மதிப்பு, கடந்த 12 மாத வருவாயைப் போல 4.7 மடங்கு என ஆஷிகா இன்ஸ்டிடியூஷனல் ஈக்விட்டீஸ் தெரிவித்துள்ளது. உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வாய்ப்புகள் அதிகரிப்பதும், திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்துவதும் நடுத்தர கால வளர்ச்சிக்கு ஆதரவாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளது.


கடல்நீரைக் குடிநீராக்குதல், கழிவுநீர் சுத்திகரிப்பு, தொழிற்சாலைத் திட்டங்கள் மற்றும் இயக்கம், பராமரிப்புப் பணிகள் லாப விகிதத்தை உயர்த்தும் என ஆஷிகா எதிர்பார்க்கிறது. 2025–26 நிதியாண்டில் 13.3 சதவீதமாக இருந்த எபிட்டா லாப விகிதம் 2028–29ல் 14 சதவீதமாக உயரும் என மதிப்பிட்டு, பங்குக்கு ரூ.2,360 இலக்கு நிர்ணயித்துள்ளது. செமிகண்டக்டர், சூரிய மின்சக்தி, தரவு மையங்கள், பசுமை ஹைட்ரஜன் துறைகளிலும் புதிய வாய்ப்புகளைச் சுட்டிக்காட்டியுள்ளது.


பெரிய திட்டங்கள், அதிக லாபம் தரும் பணிகள், ரூ.1,100 கோடி நிகர ரொக்கம் மற்றும் வலுவான பணப்புழக்க வாய்ப்பைச் சுட்டிக்காட்டிய மோதிலால் ஓஸ்வால், ரூ.2,529 இலக்குடன் ‘வாங்கலாம்’ பரிந்துரையைத் தொடர்கிறது.


நீர் உள்கட்டமைப்பு முதலீடு, கடல்நீர் சுத்திகரிப்புக்கான தேவை, மத்திய கிழக்கில் நிறுவனத்தின் வலுவான இருப்பு ஆகியவற்றைக் குறிப்பிட்ட யெஸ் செக்யூரிட்டீஸ், ரூ.2,660 இலக்கு நிர்ணயித்துள்ளது. 2025–26 முதல் 2028–29 வரை வரிக்குப் பிந்தைய லாபம் ஆண்டுக்கு சராசரியாக 26 சதவீதம் வளரும் என மதிப்பிட்டுள்ளது.

முந்தைய செய்தி
பெரியார் அறிவுலகில் போலி நூல்கள் - தேச விரோத செயலாக கருத வலியுறுத்தல்
அடுத்த செய்தி
டாடா ஸ்டீல், ஹிண்டால்கோ, பவர் கிரிட் பங்குகளின் இலக்கு விலை உயர்வு

தொடர்புடைய செய்திகள்