Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

டாடா ஸ்டீல், ஹிண்டால்கோ, பவர் கிரிட் பங்குகளின் இலக்கு விலை உயர்வு

டாடா ஸ்டீல், ஹிண்டால்கோ, பவர் கிரிட்  பங்குகளின் இலக்கு விலை உயர்வு

எபிட்டா மதிப்பீடுகளை முறையே 2 மற்றும் 9 சதவீதம் உயர்த்தியுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

இரண்டாம் காலாண்டு நிதி முடிவுகளைத் தொடர்ந்து, டாடா ஸ்டீல், ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், பவர் கிரிட் ஆகிய மூன்று நிறுவனங்களின் பங்குகளுக்கான பரிந்துரையை ‘வாங்கலாம்’ என நுவாமா இன்ஸ்டிடியூஷனல் ஈக்விட்டீஸ் உயர்த்தியுள்ளது. மூன்று பங்குகளின் 12 மாத இலக்கு விலைகளையும் உயர்த்தியுள்ளது.

டாடா ஸ்டீல் பங்கின் இலக்கு விலை ரூ.209-லிருந்து ரூ.219 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 2026–27 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில், நிறுவனத்தின் தனிப்பட்ட வட்டி, வரி, தேய்மானம் உள்ளிட்டவற்றுக்கு முந்தைய லாபம் (எபிட்டா) ரூ.10,320 கோடியாக இருந்தது. இது முந்தைய காலாண்டைவிட 9.6 சதவீதம் அதிகம். நுவாமாவின் ரூ.9,900 கோடி மதிப்பீட்டையும் இது தாண்டியது.


எஃகு விலை குறைந்ததாலும், உற்பத்திச் செலவு அதிகரித்ததாலும் ஏற்பட்ட தாக்கத்தை, அதிக விற்பனை அளவு ஈடுசெய்தது. எஃகு விலை உயர்வால், மூன்றாம் காலாண்டில் இந்தியச் செயல்பாடுகளின் எபிட்டா டன்னுக்கு சுமார் ரூ.2,400 அதிகரிக்கும் என நுவாமா எதிர்பார்க்கிறது. ஐரோப்பிய செயல்பாடுகளில் அதிக விலை மற்றும் விற்பனை அளவின் பலன் நான்காம் காலாண்டிலிருந்து கிடைக்கும் எனக் கணித்துள்ளது.


எஃகு விலை உயர்வு, இரும்புத் தாது விற்பனை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, டாடா ஸ்டீலின் 2026–27 மற்றும் 2027–28 நிதியாண்டுகளுக்கான எபிட்டா மதிப்பீடுகளை முறையே 2 மற்றும் 9 சதவீதம் உயர்த்தியுள்ளது.


ஹிண்டால்கோ பங்கின் இலக்கு விலை ரூ.1,108-லிருந்து ரூ.1,184 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. உத்கல் அலுமினா உள்ளிட்ட அதன் இந்தியச் செயல்பாடுகளின் எபிட்டா ரூ.8,450 கோடியாகப் பதிவானது. இது நுவாமாவின் ரூ.7,080 கோடி மதிப்பீட்டைவிட அதிகம். அலுமினிய விற்பனை அளவு அதிகரித்தது, மதிப்புக் கூட்டல் மற்றும் கந்தக அமில விலை உயர்வு ஆகியவை இதற்குத் துணைபுரிந்தன.

முந்தைய செய்தி
வா டெக் வாபாக் பங்குக்கு ரூ.2,660 இலக்கு
அடுத்த செய்தி
பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை - முழு நிலவரம்

தொடர்புடைய செய்திகள்