Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

நான்காவது வாரமாக மஞ்சள் ஏலம் ரத்து

நான்காவது வாரமாக மஞ்சள் ஏலம் ரத்து

மழை காரணமாக மஞ்சளை விற்பனைக்குத் தயார் செய்ய முடியாத நிலை ஏற்பட்டதால், கடந்த 27-ம் தேதியும் ஏலம் ரத்து செய்யப்பட்டது.

பகிரவும் WhatsApp Facebook

நாமகிரிப்பேட்டை ஆர்.சி.எம்.எஸ். சங்கத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மஞ்சள் ஏலம் நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் உள்ள 17 தனியார் மஞ்சள் மண்டிகள் மற்றும் ஆர்.சி.எம்.எஸ். மூலம் வாரந்தோறும் சராசரியாக குறைந்தபட்சம் ரூ.50 லட்சம் மதிப்பிலான மஞ்சள் விற்பனை நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில், கடந்த சில வாரங்களாக இப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் மஞ்சள் அறுவடை மற்றும் காயவைத்து தயார் செய்வதில் விவசாயிகளுக்கு சிரமம் ஏற்பட்டது.
இதனால், கடந்த மாதம் 13-ம் தேதி மஞ்சள் வரத்து குறைந்ததால் ஏலம் ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து, 20-ம் தேதி ஆயுதபூஜையை முன்னிட்டு ஏலம் நடைபெறவில்லை. 

மழை காரணமாக மஞ்சளை விற்பனைக்குத் தயார் செய்ய முடியாத நிலை ஏற்பட்டதால், கடந்த 27-ம் தேதியும் ஏலம் ரத்து செய்யப்பட்டது.

இதற்கிடையே, வரத்து குறைவாக இருந்ததால் நவம்பர் 3-ம் தேதி நடைபெறவிருந்த மஞ்சள் ஏலமும் ரத்து செய்யப்பட்டது. தொடர் மழையால் அடுத்தடுத்து மஞ்சள் ஏலம் ரத்து செய்யப்பட்டதால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முந்தைய செய்தி
பிஎஸ்இ நிகர லாபம் 45% உயர்வு
அடுத்த செய்தி
பயோகான் நிறுவன வருவாய் ரூ.4,423 கோடி

தொடர்புடைய செய்திகள்