Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

பிஎஸ்இ நிகர லாபம் 45% உயர்வு

பிஎஸ்இ நிகர லாபம் 45% உயர்வு

முன்னெப்போதும் இல்லாத அளவில் ரூ.10,494 கோடியாக உயர்ந்தது.

பகிரவும் WhatsApp Facebook

பிஎஸ்இ பங்குச் சந்தையின் நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டு ஒருங்கிணைந்த நிகர லாபம் 45 சதவீதம் உயர்ந்து ரூ.807.52 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில் லாபம் ரூ.557 கோடியாக இருந்தது.

ஜூலை–செப்டம்பர் காலாண்டில் செயல்பாட்டு வருவாய் 34 சதவீதம் அதிகரித்து ரூ.1,432.66 கோடியை எட்டியது. பங்கு ரொக்கப் பிரிவின் சராசரி தினசரி வர்த்தகம் முன்னெப்போதும் இல்லாத அளவில் ரூ.10,494 கோடியாக உயர்ந்தது.


பிஎஸ்இ ஸ்டார் எம்எஃப் தளத்தில் பரிவர்த்தனைகள் 21.9 சதவீதம் அதிகரித்து 24.52 கோடியானது. முதல் அரையாண்டில் வருவாய் ரூ.2,998.68 கோடியாகவும், நிகர லாபம் ரூ.1,680.18 கோடியாகவும் உயர்ந்தன.


முக்கிய வணிகப் பிரிவுகளின் வளர்ச்சியும், முதலீட்டாளர்களின் பங்கேற்பும் இந்த முன்னேற்றத்திற்குக் காரணம் என நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான சுந்தரராமன் ராமமூர்த்தி தெரிவித்தார். அக்டோபரிலும் வர்த்தக வளர்ச்சி தொடர்ந்து வலுப்பெற்றது.

முந்தைய செய்தி
முட்டை விலை உயர்வு - 5 நாட்களில் இவ்வளவா?
அடுத்த செய்தி
நான்காவது வாரமாக மஞ்சள் ஏலம் ரத்து

தொடர்புடைய செய்திகள்