Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

பயோகான் நிறுவன வருவாய் ரூ.4,423 கோடி

பயோகான் நிறுவன வருவாய் ரூ.4,423 கோடி

செயல்பாட்டு வருவாய் 2 சதவீதம் அதிகரித்து ரூ.4,389 கோடியை எட்டியுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

மருந்து தயாரிப்பு நிறுவனமான பயோகானின் செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் 52 சதவீதம் சரிந்து ரூ.41 கோடியாக பதிவாகியுள்ளது.

கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் நிறுவனம் ரூ.85 கோடி லாபம் ஈட்டியிருந்தது. நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.4,423 கோடியாக உயர்ந்துள்ளது. செயல்பாட்டு வருவாய் 2 சதவீதம் அதிகரித்து ரூ.4,389 கோடியை எட்டியுள்ளது.


உயிரி மருந்துகள் பிரிவு வருவாய் 5 சதவீதம் உயர்ந்து ரூ.3,583 கோடியாகவும், பொதுவகை மருந்துகள் வருவாய் 10 சதவீதம் அதிகரித்து ரூ.774 கோடியாகவும் பதிவாகியுள்ளன. உயிரி மருந்துகளுக்கு மாற்றான மருந்துகள் பிரிவு வருவாய் 3 சதவீதம் உயர்ந்து ரூ.2,809 கோடியை எட்டியுள்ளது.


நிறுவனத்தின் செயல்பாட்டு லாபம் ரூ.865 கோடியாக உள்ளது. வட்டிச் செலவு 12 சதவீதம் குறைந்து ரூ.240 கோடியாகியுள்ளது. பிரேசிலில் சுமார் 40 கோடி டாலர் மதிப்பிலான 10 ஆண்டு மருந்து ஒப்பந்தத்தையும் நிறுவனம் பெற்றுள்ளது. மலேசியாவில் இன்சுலின் உற்பத்தித் திறனும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி
நான்காவது வாரமாக மஞ்சள் ஏலம் ரத்து
அடுத்த செய்தி
காலி பாட்டிலுக்கான ரூ.10-ஐ வங்கிக் கணக்கில் செலுத்த திட்டம்

தொடர்புடைய செய்திகள்