Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

காலி பாட்டிலுக்கான ரூ.10-ஐ வங்கிக் கணக்கில் செலுத்த திட்டம்

காலி பாட்டிலுக்கான ரூ.10-ஐ வங்கிக் கணக்கில் செலுத்த திட்டம்

காலி மதுபான பாட்டில்களை திரும்ப ஒப்படைத்தால் ரூ.10 நேரடியாக வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் செலுத்தும் புதிய நடைமுறையை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

காலி மதுபான பாட்டில்களைத் திரும்பப் பெறுவதற்காக தற்போது நடைமுறையில் உள்ள ரொக்கப் பணம் வழங்கும் திட்டத்திற்குப் பதிலாக, தானியங்கி இயந்திரங்கள் மூலம் பாட்டில்களை சேகரித்து, ஒவ்வொரு தகுதியான பாட்டிலுக்கும் ரூ. 10-ஐ வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் செலுத்தும் புதிய திட்டத்தைச் செயல்படுத்தத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:

தற்போதைய நடைமுறையில், மதுபான பாட்டில்களின் அதிகபட்ச சில்லறை விலையுடன் கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்பட்டு, காலி பாட்டில்களைத் திரும்ப ஒப்படைக்கும்போது அந்தத் தொகை நுகர்வோருக்கு ரொக்கமாகத் திருப்பி வழங்கப்படுகிறது.


இந்த நடைமுறையில் டாஸ்மாக் பணியாளர்களுக்குக் கூடுதல் பணிச்சுமை, காலி பாட்டில்களைச் சேமித்து வைப்பதில் இடவசதிப் பற்றாக்குறை, சுகாதாரப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைப் பிரச்சினைகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மாற்றும் வகையில், தானியங்கி காலி பாட்டில் சேகரிப்பு இயந்திரங்கள் மூலம் புதிய திட்டத்தைச் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, ஒவ்வொரு மதுபான பாட்டிலுக்கும் தனித்துவமான QR குறியீடு வழங்கப்படும். இந்தக் குறியீடு மின்னணு விற்பனைப் பதிவுடன் இணைக்கப்பட்டிருக்கும். இதன்மூலம் வாடிக்கையாளர் எந்தக் கடையில் மதுபானம் வாங்கியிருந்தாலும், அங்கீகரிக்கப்பட்ட சேகரிப்பு மையங்களில் காலி பாட்டில்களைத் திரும்ப ஒப்படைக்கலாம்.


பாட்டிலில் உள்ள QR குறியீட்டு இயந்திரம் மூலம் ஸ்கேன் செய்து, அதன் விற்பனை விவரங்கள் சரிபார்க்கப்படும். பாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு, அதற்கான ரூ.10 நுகர்வோர் வழங்கும் மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும். ரொக்கப் பணம் வழங்கப்படாது.

 QR குறியீடு இல்லாத பாட்டில்கள், குறியீடு சேதமடைந்த அல்லது தெளிவாகப் படிக்க முடியாத பாட்டில்கள், அங்கீகரிக்கப்பட்ட விற்பனைப் பதிவுடன் தொடர்புபடுத்த முடியாத பாட்டில்கள், ஏற்கெனவே ஊக்கத்தொகை பெறப்பட்ட பாட்டில்கள் ஆகியவற்றுக்கு மீண்டும் தொகை வழங்கப்படாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி
பயோகான் நிறுவன வருவாய் ரூ.4,423 கோடி
அடுத்த செய்தி
தவெக சார்பில் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை

தொடர்புடைய செய்திகள்