Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

தவெக சார்பில் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை

தவெக சார்பில் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை

முதல்வர் விஜய் மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ், ஊக்கத்தொகை வழங்கினார்.

பகிரவும் WhatsApp Facebook

பத்து மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளை தொகுதி வாரியாக தேர்வு செய்து, தவெக சார்பில் கல்வி விருது வழங்கும் விழா சென்னை நீலாங்கரையில் நடைபெற்றது. முதல்வர் விஜய் மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ், ஊக்கத்தொகை வழங்கினார். தொடர்ந்து அவர் பேசியதாவது:

நான் முதல்வராக இங்கு வரவில்லை, உங்கள் அண்ணணாக வந்துள்ளேன். மாணவ-மாணவிகள் தங்களுக்கு வரும் தடைகளைக் கண்டு தயங்கக் கூடாது. உங்களுக்கு தடை போடுகிறார்கள் என்றால் உங்கள் வெற்றி அவர்களுக்கு தெரிகிறது என அர்த்தம். எக்காரணம் கொண்டும் லஞ்சம் மற்றும் போதைப் பழக்கத்திற்கு சென்று விடக் கூடாது. 


நல்லதையே நினையுங்கள் நல்லதே நடக்கும், உங்களுக்கு துணையான நான் இருக்கிறேன், வெற்றி நிச்சயம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


நிகழ்ச்சியில், 2025-26 கல்வியாண்டில் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களைச் சேர்ந்த, 30 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

முந்தைய செய்தி
காலி பாட்டிலுக்கான ரூ.10-ஐ வங்கிக் கணக்கில் செலுத்த திட்டம்
அடுத்த செய்தி
நார்தர்ன் ஆர்க் நிகர லாபம் 41% உயர்வு

தொடர்புடைய செய்திகள்